டெல்லி: ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் நடத்தி வரும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவுதான் இல்லை என்றால் அந்த குழுவின் தலைவர்களும் கூட கலந்து கொள்ளவில்லை.
ஊழலுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக அன்னா ஹசாரே குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் நாள் போராட்டத்துக்கு வந்த கூட்டம் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாகக் குறைந்தது. நேற்று ராம்தேவ் கொஞ்சப்பேரை கூட்டி வந்தார். ஆனால் அவருடன் வந்த ஆதராவளர்களும் அவர் சென்ற பின்னர் எஸ்கேப்பாகிவிட்டனர்.
இந்த நிலையில் இன்றும் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. அதிலும் அன்னா ஹசாரே, கிரண்பேடி, குமார் விஸ்வாஸ் ஆகிய தலைவர்கள்தான் வந்திருந்தனர். பெரும்பாலானா அன்னா குழு தலைவர்களும் இன்று எஸ்கேப்பாகிவிட்டனர்.
சரி உண்ணாவிரதம் இருந்த அன்னா குழுவினர் எப்படித்தான் பொழுதைப் போக்கினர்? பெரும்பாலானோர் சீட்டாடித்தான் பொழுதைக் கழித்தனர்.
நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அன்னா ஹசாரே கூறியிருக்கிறர். அப்பவாவது கூட்டம் சேருதான்னு பார்ப்போம்!
No comments:
Post a Comment