Monday, July 30, 2012

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

பெங்களூர்: டயர் 2,3 மற்றும் 4 பொறியியல் கல்லூரிகளில் (ஐஐடி போன்றவை டயர் 1 கல்லூரிகள்) படித்து வெளியேறும் மாணவர்களில் 10ல் ஒரு மாணவருக்கு மட்டுமே உடனே வேலை கிடைக்கும் தகுதி உள்ளது என்று பர்ப்பிள்லீப் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் தகுதி எவ்வளவு உள்ளது என்பதை அறிய நடத்தப்பட்ட தேர்வை நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரி மாணவர்கள் எழுதினர். கல்லூரி படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண் வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு தேர்வு எழுதிய 198 கல்லூரிகளைச் சேர்ந்த 34,000 மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பர்ப்பிள்லீப் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கணக்கெடுப்பில் டயர் 2,3 மற்றும் 4 பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறும் மாணவர்களில் 10ல் ஒரு மாணவருக்கு மட்டுமே உடனே வேலை கிடைக்கும் தகுதி உள்ளது கண்டுபிடிக்கப்ப்டடுள்ளது. மேலும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பயிற்சி அளித்தாலும் வேலைவாய்ப்பை பெற தகுதியில்லாதவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பர்ப்பிள்லீப் நிறுவன சிஇஓ அமித் பன்சால் கூறுகையில்,
நம் நாட்டின் வளர்ச்சி திறமையானவர்களை உருவாக்குதைப் பொறுத்து தான் உள்ளது. தற்போதுள்ள பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு சூழலை வைத்து பார்க்கும்போது, பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் அறிவையும், திறமையையும் மேம்படுத்த வேண்டும். கல்லூரிகள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து மாணவர்களை வேலைவாய்ப்பு பெறும் தகுதியுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment