டெல்லி: 12 ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் காலித், முனீர், அர்ஷத், அப்துர்ரஜாக், முஹம்மத் அலீம் மற்றும் சொஹ்ராப் அஹ்மத் ஆகிய 6 பேர், நிரபராதிகள்
என இம்மாதம் 10ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ATS போலீசார், இவர்கள் மீது சுமத்திய எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை. பதட்டத்தை உருவாக்கும் வகையில் "போஸ்டர் ஒட்டினார்கள்" என்ற, சிறு குற்றச்சாட்டும் கூட நிரூபிக்கப்படவில்லை.
12 ஆண்டுகளுக்கு முன், இவர்கள் கைது செய்யப்பட்ட போது பக்கம் பக்கமாக தேசிய அளவில் செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கைகள், இவர்கள் நிரபராதிகள் என்ற நற்சான்றுடன் விடுதலையானதை எந்த மீடியாவும் 9 நாளாகியும் செய்தி போடவில்லை. (அது தான், இந்திய "மீடியா தர்மம்" என்பது முஸ்லிம்களுக்கு தெரியவே செய்யும்) மத்திய பிரதேச "ATS" ஜோடித்த இந்த பொய்யான வழக்கில் நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட போலீஸ், அதற்கு வஞ்சகம் தீர்த்துக்கொள்ளும் வகையில், உள்ளேயிருந்து 6 பேர் வெளிவந்திருப்பதால் இந்த மாதத்துக்குள் இரண்டு மடங்கு முஸ்லிம்களை உள்ளே தள்ள "டார்கெட்" அமைத்து செயல்பட துவங்கி விட்டது.
நேற்று முன்தினம் (17/07) டெல்லியில் சுபைர் கான் (36) என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. நல்லிரவு 1மணிக்கு அவரது சகோதரர் தய்யிபை ஆர்.கே.புரம் காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொண்ட போலீஸ், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், உனது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளான், என தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கும் சுபைரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், மற்றும் பொது மக்கள், அவர் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் கடை நிலை ஊழியராக, கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறுகின்றனர்.
போலீசின் இந்த அராஜக செயலை கண்டித்து, நேற்று (18/07) உள்ளூர் காவல் நிலையமான "ஜாமியா நகர்" காவல் நிலையத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த முற்றுகையில் கலந்துக் கொண்டன. இதற்கிடையில், சுபைர் கானை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய டெல்லி கிரைம் பிரான்ச் போலீஸ், அவரை 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்தனர்.
மெட்ரோபாலிட்டன் நீதிபதி மனீஷ், 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். தொடர்ந்து காவல் துறையால் கட்டம் கட்டி கைது செய்யப்படும் முஸ்லிம் சமூகம், இதற்கான பதிலடியை நிச்சயம் ஒரு நாள் பதிவு செய்யும்.

No comments:
Post a Comment