Saturday, May 5, 2012

பாபர் மசூதி இடிப்பு: அத்வானி மீதான வழக்கு ஜுலை 25-ல் விசாரணை

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் ஜூலை 25-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களின் பேச்சுக்களால் தூண்டப்பட்டுத்தான் கரசேவகர்கள் மசூதியை இடித்தனர் என்றும், இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ரிதம்பாரா, வினய் கத்தியார், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, உமா பாரதி மற்றும் பலர் மீது சி.பி.ஐ. குற்றச்சதி குற்றச்சாட்டை சுமத்தி இருந்தது. ஆனால் இவர்கள் மீதான குற்றச்சதி குற்றச்சாட்டை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.,

சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் எச்.எல்.டாட்டு, சி.கே.பிரசாத் ஆகியோர் ஜுலை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment