Friday, May 4, 2012

பிரிட்டன் உள்ளாட்சி தேர்தல்: எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு


பிரிட்டனில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணியை கட்சியைச் சேர்ந்த கன்சர்வேட்டிட் கட்சியும், லிபரல் டெமாக்ரெடிக் கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன.
அதே வேளை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரும் வெற்றி பெற்று வருகிறது.
அதிகமான உள்ளூராட்சி கவுன்சில்களுக்கான முடிவுகள் வந்திருக்கும் நிலையில், இதுவரை தொழிற்கட்சி 470க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியிருக்கிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி சுமார் 280 இடங்களை இழந்திருக்கிறது. லிபரல் டெமாக்ரெடிக் கட்சி 180க்கும் அதிகமான இடங்களை இழந்திருக்கிறது.
வாக்களிப்பு வீதம் கடந்த 12 வருடங்களில் இந்தத்தடவை மிகவும் குறைவாகும்.
அரசாங்கத்தின் செலவு திட்டத்துக்கான மக்களின் தீர்ப்பாக இந்த முடிவுகளைப் பார்க்க முடியும் என்று கருத்து நிலவுகிறது.

No comments:

Post a Comment