Sunday, May 6, 2012

ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?


 A Website Track The Trains நாகர்கோவில்: நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற விபரத்தை வழங்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரயில்வேத் துறை துவங்கியுள்ளது.
நாட்டில் ஓடும் ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய ரயில்வேத்துறை www.trainenquiry.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று 20 நொடியில் எந்த ஒரு ரயிலின் சேவை விபரங்களையும் அறிய முடியும்.

இன்டர்நெட் வசதி கொண்ட செல்போன்களிலும் இந்த விபரங்களை பெறலாம். ரயில் எண்களை அளித்தால் ரயில் எந்த ரயில் நிலையத்தை சென்றடைந்தது, அடுத்து வரும் நிலையம் எது என்பது உள்ளிட்ட விபரங்களை பெறலாம். தற்போதுள்ள 139 எண்ணை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிற 8,000க்கும் அதிகமான ரயில்களின் விபரங்களை பெற முடியும். பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து இந்தியன் ரயில்வேயின் நேஷனல் டிரெய்ன் என்கொயரி சிஸ்டம் (என்டிஇஎஸ்) கீழ் இந்த இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment