Monday, May 21, 2012

காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு- மின்வெட்டு மேலும் குறையும்

 Wind Power Goes High Tn
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அளவு குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் தலைநகர் சென்னையில் வழக்கம் போல தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல 2 மணி நேர மின்வெட்டு அமலிலேயே உள்ளது.
அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பல மணி நேர மின்வெட்டு என்பதிலிருந்து பெரிய அளவில் மாற்றம் இல்லை.

கடந்த மாதம் காற்றாலை மின் உற்பத்தி மூலம், 2500 மெகாவாட்டுக்கும் மேல் கூடுதலான மின்சாரம் கிடைத்தது. இதனால் படிப்படியாக மின்வெட்டு ஓரளவு குறைந்தது.

ஆனால் கடந்த 2 வாரங்களாக காற்று குறைந்து போய், வெயில் வேகம் பிடித்தது. இதனால் உற்பத்தியும் கிடுகிடுவென குறைந்து 450 மெகாவாட் ஆனது. ஆனால் தற்போது 17ம் தேதி முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் 19ம் தேதி மாலை வரை மின்உற்பத்தியின் அளவு 2695 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.

தொடர்ந்த இந்த உற்பத்தி அதிகரித்து வந்தால், அரசும், மின் உற்பத்தியை நிறுத்த வேண்டாம் என்று கூறினால் மின்வெட்டு நேரம் சற்று குறையலாம்.

No comments:

Post a Comment