சிக்கன், முட்டை உள்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய பல கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக இந்தியாவுடன் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் குறைதீர்வு கமிட்டியிடம் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உறுதியான மார்க்கெட்டை பிடிக்க அமெரிக்க வேளாண் பொருட் உற்பத்தியாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தையும் மிகப்பெரிய சந்தையையும் கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து கறிக்கோழி, முட்டை உள்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றை தளர்த்தி, அமெரிக்காவில் இருந்து வேளாண் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டும்.
இந்த பிரச்னையில் இருநாட்டுக்கும் இடையில் உள்ள பிரச்னையை உலக சுகாதார குறைதீர்வு கமிட்டி விரைந்து தீர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரோன் கிர்க் புகார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment