Thursday, May 17, 2012

பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தருணம்: பிரணாப்

 Pranab Wants Austerity What Other
டெல்லி: நாட்டின் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள சில கடினமான சிக்கன நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் அவர் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 8.4 விழுக்காடாக 2 ஆண்டுகள் இருந்து வந்தது. ஆனால் 2011-12-ம் ஆண்டில் இந்த வளர்ச்சியானது 6.9 விழுக்காடாகக் குறைந்து போனது. இது நமக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடியதுதான்.

சர்வதேச நிலைமைகள் சிக்கலானதாக இருக்கிறது. பொருளாதார சிக்கல்களை ஒவ்வொரு நாடாக எதிர்கொண்டு வருகிறது. இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். உண்மை இல்லாத ஒரு உலகத்தில் நம்மால் வாழ முடியாது.

பொருளாதார சிக்கல்களை சமாளிக்க வேறுசில வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. நாட்டு மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ சில கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றார் அவர்.

பங்குச் சந்தை சரிவு தொடர்பாக குறிப்பிட்ட பிரணாப், பங்குச் சந்தை மீட்சிக்கு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். மேலும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினையே பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment