Monday, May 21, 2012

மீரா குமார், அப்துல் கலாம் ஓ.கே, பிரணாபை ஜனாதிபதியாக ஏற்க முடியாது- மமதா

 Mamata Won T Endorse Pranab Mukherjee President
டெல்லி: மீரா குமார் நல்லவர், அப்துல் கலாம் நல்ல குடியரசுத் தலைவராக இருந்தவர். கோபால் காந்தி நல்ல திறமையுடன் கூடியவர். இவர்களில் யாரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தினாலும் சரிதான். ஆனால் பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக ஏற்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியுள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் கலக்கமடைந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் விவகாரத்தில் மீண்டும் சூட்டைக் கிளப்பியுள்ளார் மமதா. இதுகுறித்து அவர் கூறுகையில், மீரா குமாரை எனக்குப் பிடிக்கும், மிகவும் மென்மையாக பேசக் கூடியவர் அவர். கோபால் காநந்தி சிறந்த முறையில் செயலாற்றுபவர். அப்துல்கலாம் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்பட்டவர்.

பிரணாப் முகர்ஜி இந்த உலகின் சிறந்த குடிமகனாக இருக்கலாம். ஆனால் என்னைக் கேட்டால், மீரா குமார், கோபால் காந்தி, கலாம் ஆகியோரில் ஒருவரைத்தான் சொல்வேன். ஒருவேளை பிரணாப் முகர்ஜியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்யுமானால் அது அவர்களின் சாய்ஸ் என்று கூறியுள்ளார் மமதா.

மமதாவின் இந்த திடீர் திருப்புமுனை பதிலால் காங்கிரஸ் வட்டாரம் கலக்கமடைந்துள்ளது. பிரணாப் முகர்ஜியை நிறுத்தும் முடிவில் உள்ள காங்கிரஸ் அவருக்கு பெருமளவில் ஆதரவைத் திரட்டி வரும் நிலையில், மமதாவின் இந்தப் பதில் குழப்பத்தைக் கூட்டியுள்ளது.

இதனால் மமதாவை சமாளித்து சரிக்கட்ட வேண்டிய நிலைக்கு மறுபடியும் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment