முசப்பர் நகர் :பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம்களின் பயன் பாட்டில் உள்ள மயானம் (கப்ரஸ்தான்) தற்போது, சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், முசப்பர் நகர் மாவட்டம், ஜடூதா பகுதியில் உள்ள கப்ரஸ்தான், ஒரு சில விஷமிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செய்தியறிந்து, மாவட்ட ஜமியதுல் உலமா தலைவர் மவுலானா நாசர் முஹம்மத், பொதுச்செயலாளர் மெஹர்பான் அலி மற்றும் உள்ளூர் ஆலிம் தாஹிர் காசிமி உள்ளிட்ட தலைவர்கள், மக்களை சந்தித்து விவரம் கேட்டனர்.
ஊர் தலைவர் நிஜாமுத்தீன் உள்ளிட்ட பொது மக்கள் கூறும்போது, பல நூறு வருடங்களாக முஸ்லிம் அடக்கஸ்தலமாக பயன் பட்டு வரும் ஜடூதா பகுதியில், சில நாட்களாக ஒரு சில விஷமிகள் அதை ஆக்கிரமித்து, மாட்டு சாணங்கள் உள்ளிட்ட கழிவுகளை அங்கு கொட்டி வந்த அவர்கள், கடந்த மார்ச் 29 (29/03/12) அன்று, திடீர் என கொட்டகை அமைத்தும் பூஜை புனஸ்காரங்கள் செய்தும், ஆக்கிரமிப்பு வேலையில் ஈடு பட்டனர். முஸ்லிம்கள், இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த போதும், மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றும் விஷயத்தில் மெத்தனத்துடன் செயல்படுகிறது, என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த இடத்தில் இதற்க்கு முன்பு இப்படி ஒரு ஆக்கிரமிப்பு முயற்சி நடந்த போது, கடந்த 1980ம் ஆண்டு, நீதிமன்றம் தலையிட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுடன், உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்றும், தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார் என்று, பஞ்சாயத்து தலைவர் நிஜாமுத்தீன் சுட்டிக்காட்டினார். தற்போது, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் சுரேந்தர் பார்வைக்கு சென்றுள்ளது. ஆவணங்களை சரி பார்த்த ஆட்சியர் சுரேந்தர் சிங், நிச்ச்சயம் நியாயம் வழங்கப்படும் என்றும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் ,என்றும் உறுதியளித்தார். இதையடுத்து ஆட்சியரை சந்தித்த குழுவினர், மாவட்டம் முழுவதிலுமுள்ள கப்ரஸ்தான் இடங்களை பாதுகாத்திட வேலியமைத்து தருமாறும் வேண்டுகோள் விடுத்து, விடை பெற்றனர

No comments:
Post a Comment