Saturday, May 19, 2012

ஒபாமா- ஹோலண்டே சந்திப்பு


ஆப்கானிஸ்தானில் உள்ள பிரெஞ்ச் படைகள் 2012ஆம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் நாளை நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
இக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டோ, ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசிய ஹோலண்டே, இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரெஞ்ச் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்றார். மேலும் நேட்டோ படைகளுக்கு எவ்விதத்திலும் உதவி செய்ய தயார் என்று தெரிவித்தார்.
ஒபாமா சமீபத்தில் நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஹோலண்டேவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பிரான்சும், அமெரிக்காவும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று தெரிவித்தார்.
இதற்கு ஹோலண்டே, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவையும் பாதிக்கும் என்று தெரிவித்தார்.
அதன் பின் ஈரானின் அணு ஆயுதம், சிரியா போராட்டம் மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் முழுவதுமாக 2014ஆம் ஆண்டு வெளியேறிவிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு ஆப்கான் படைவீரர்கள் தான் தங்களது தாயகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்காக இந்த வீரர்கள் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்காக மட்டும் வருடத்திற்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment