Thursday, November 24, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு



புதுடெல்லி:வருகிற 26,27 ஆகிய தினங்களில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டில் அரசியல் மற்றும் சமூகத்துறையை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றார்கள்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ், லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்பட பல்வேறு தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டு நிகழ்ச்சிநிரலை குறித்து பேட்டியளித்தார்.
pfi sjc
இம்மாநாடு, சிறுபான்மை சமூகங்களின் சமூக நீதிக்கான போராட்டத்தில் இம்மாநாடு நிர்ணாயக பங்கினை வகிக்கும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.
வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் மாநாட்டுத் திடலில் கொடியை ஏற்றிவைப்பார்.
26-ஆம் தேதி டுகெதர் எம்பவர்மெண்ட்: டயலாக் வித் ஃப்யூச்சர், பீப்பிள்ஸ் ரைட் டூ ஜஸ்டிஸ் ஆகிய தலைப்புகளில் இரண்டு கருத்தரங்குகள் நடைபெறும்.


26-ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் மில்லி கன்வென்சன் கருத்தரங்கத்தை ஃபதேஹ்பூர் ஷாஹி மஸ்ஜித் இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் துவக்கி வைப்பார். எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத், சமாஜ்வாதி கட்சி தேசிய செயலாளர் கமால் ஃபாரூகி, மில்லி கெஸட் பத்திரிகையின் ஆசிரியர் ஸஃபருல் இஸ்லாம்கான், ஷுஐப் இக்பால் எம்.எல்.ஏ, ஆல் இந்தியா பாப்ரி மஸ்ஜித் ஆக்‌ஷன் கமிட்டி கன்வீனர் வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜீலானி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் அர்ஷிகான், எஸ்.டி.பி.ஐ துணைத்தலைவர் பேராசிரியை நாஸ்னி பேகம், ஹம்தர்த் பல்கலை கழக துணைப் பேராசிரியர் ஸாஃபியா அமீர், எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச்செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், நுவைத் ஹாமித், வழக்கறிஞர் பதருல் ஹக் ஆகியோர் கருத்துரை வழங்குவார்கள்.
மதியம் 2 மணிக்கு துவங்கும் இரண்டாவது கருத்தரங்கில் தேசிய ஆலோசனை குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர், மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் கவிதா ஸ்ரீவஸ்தவா, மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, தலித் வாய்ஸ் பத்திரிகை ஆசிரியர் வி.டி.ராஜசேகர், தேஜஸ் பத்திரிகையின் எக்ஸ்க்யூடிவ் எடிட்டர் என்.பி.சேக்குட்டி, ஜான் தயாள், தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் அரசியல் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பியுமான தொல்.திருமாவளவன், பேராசிரியர் எஸ்.எம்.ஜெயப்பிரகாஷ், டாக்டர் ஷம்சுல் இஸ்லாம் கான், டாக்டர் உதித் ராஜ், டாக்டர்.சுரேஷ் கெய்ரனார், அப்துற்றஷீத் அக்வான் ஆகியோர் கருத்துரை வழங்குவார்கள்.
மாநாடு தொடர்பாக நடைபெறும் கண்காட்சி 25-ஆம் தேதி மூன்று மணிக்கு மக்களின் பார்வைக்காக திறக்கப்படும்.
26-ஆம் தேதி பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் செய்யத் ஸஹாபுத்தீன், ராஷ்ட்ரீய ஸஹாரா முதன்மை இயக்குநர் அஸீஸ் பர்னி, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய பொதுச்செயலாளர் மெளலானா வாலி ரஹ்மானி, அகில இந்திய மில்லி கவுன்சில் தலைவர் மெளலானா அப்துல்லாஹ் முகீஸி, ஐ.ஒ.எஸ் தலைவர் முஹம்மது மன்சூர் ஆலம், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப், மாநாட்டு பொது கன்வீனர் முஹம்மது அலி ஜின்னா, கன்வீனர் முஹம்மது ஷாஃபி, ஊடகத்துறை பொறுப்பாளர் அனீஷ் அஹ்மத் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment