Wednesday, September 4, 2013

எகிப்திய போராட்டம் வெற்றிப்பெறுமா?



சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பிர்அவ்னிய பிடியில் இருந்த எகிப்து சென்ற வருடம்தான் விடுதலைப பெற்றது. மத்திய கிழக்கில் மக்கள் புரட்சி வேகமாக எழுந்து வந்தபோது, தூனிஸியா தொடக்கம் எகிப்து வரை மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. 

தற்போது சிரியாவில் நவீன ஷைத்தான் பிர்அவ்னின் வாரிசுகளில் ஒரு வரான பஸார் அல் அஸதின் கொடுங்கோலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம் கள் உயிர் தியாகம் செய்த வண்ணமுள்ளனர். ஜனநாயகம்| என உலகம் கூறும் கட்டமைப்பிற்குள் எகிப்து நாட்டை உருவாக்கிட எகிப்திய மக்கள் ஒட்டுமொத்தமாக விரும்பினார்கள். 

இதன் விளைவாகவே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆத்ம நண்பனான ஹுஸ்னி முபாரக்கின் 30 வருட ஆட்சிக்கு எதிராக சுயாதீனமான சுதந்திரமான ஆட்சியை வேண்டி சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டார் கள். முபாரக் பதவியிலிருந்து ஒதுங்கினார். தேர்தல் நடாத்தப்பட்டது. பல்வேறு கட்சி கள் தேர்தலில் குதித்தன. இஹ்வானுல் முஸ்லிமூன் கட்சி வெற்றி பெற்றது. சகோதரர் முர்ஸி ஜனாதிபதியானார்.

முர்ஸியின் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே கிடைத்தது. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் கிடைத்தது. முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் பலசீரமைப்புகள் நடக்கலாயின. தன்னி றைவு அடைந்த நாடாக எகிப்தை ஆக்கிட முயற்சித்தார். இது ஒரு பாரிய சவால். 

50 வருடங்களுக்கும் மேலால் நிலவி வந்த சாத்தானிய சுவடுகளை களைந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை தகர்த்து முன்னேற்றம் காண்பது என்பது சாமான்ய சபதமுமல்ல. குறுகிய கால பணியுமல்ல. இஸ்ரேலின் கொடுங்கோலுக்கு ஆளாகி அள்ளும் பகலும் செத்து மடியும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எகிப்தின் எல்லையை திறந்து விட்டார். முபாரக்கின் ஆட்சியில் இஸ்ரேலுக்கு சொற்ப விலைக்கு (புயள) வாயுவை குத்தகைக்குக் கொடுத்ததை கட்டுப்படுத்தினார். அரச நிர்வாக ரீதியில் பல மாற்றங்கள் செய்து வந்தாலும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்தன. 

பதவி ஏற்ற ஒரு வருடத்தில் நாட்டில் எல்லா பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை கண்டு விட வேண்டும் என்று புத்தியுள்ள எவனும் கூற மாட்டான். ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சியில் ஒரு வருட பூர்த்தியில் அவருக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களோ அல்லது வேறு வகையான குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்பட்டதாக இதுவரை எச்செய்தியும் வந்ததில்லை. 

நாட்டில் அபிவிருத்திப் பணியின் முன்னேற்றத்தை குறித்த ஆட்சி காலப்பகுதி முடிவடையும் நிலையில்தான் பார்க்க முடியுமே தவிர, ஒரு வருடத்திற்குள் பார்த்து விட முடியாது. ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சியின் ஒரு வருட கால எல்லைக்குள் வறுமைக்கு தீர்வும் வேலையில்லா பிரச்சினைக்குத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்று கூறி மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். அதன் நிமித்தமே முர்ஸியின் பதவி கவிழ்க் கப்பட்டு, இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. 

ஆனால் தற்போது முர்ஸியின் மீது கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்படுகிறது. அவரது அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இறும்புப் பிடிக்குள் ஆட்சியை இராணுவம் வைத்துள்ளது. ஹுஸ்னி முபாரகின் ஆட்சியில் இராணுவத்தினர் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக செயற்பட்டவர்கள் முர்ஸியின் பதவி கவிழ்ப்புக்குக் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. 

மக்களை அடக்கியாண்ட சண்டாளன் ஹுஸ்னி முபாரகின் ஆட்சியை சற்றேனும் கவிழ்க்க முயற்சிக்காத இராணுவம் முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க முனைந்தது என்றால் சந்தேகமின்றி அமெரிக்காவின தும் இஸ்ரேலினதும் ஆதரவும் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை. 

தற்போது ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முர்ஸின் எதிர்ப்பாளர்களுக்கு அள்ளி வழங்கிய மில்லியன் கணக்கான டாலர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வேலையில்லாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று இவர்கள் ஏற்படுத்திய குழப்பமே ஒரு நாடகம்தான். மக்களால் தெரிவு செய்யப்பட்ட முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றி தான் விரும்பிய ஒருவரை ஜனாதிபதியாக நியமித்து ஆட்சியை கொண்டு செல்கிறது என்றால் எகிப்திய மக்கள் ஜனநாயகம்| என்ற காற்றை சுவாசிக்க இடம் தரப்பட மாட்டாது என்பது தெளிவாகிறது. 

இராணுவத் தளபதி ஜெனரல் அப்துல் பத்தாஹ் சிசி அவர்களை ஜனாதிபதி முர்ஸி பெரிதும் நம்பியிருந்தார். நம்பிக்கைக்குரியவனே துரோகியாக மாறி யுள்ளான். இத்துரோகியின் செயற்பாட்டுக்கு மேற்கு நாடுகள் மௌன அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்ரோகத்திற்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் வீதியில் இறங்கி நீதி கேட்கிறார்கள். அப்பாவி மக்கள் சிவிலியன்கள் இராணுவத்தால் வேட்டையாடப்படுகிறார்கள்.

இதுவரை 1200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கில் காயப்பட்டுள்ளார்கள்.. மேற்கு நாடுகள் தங்களுக்குச் சார்ப்பாக முபாறகின் ஆட்சியில் எதிர்பார்த்த லாபம் இதன் பின் எகிப்தில் கிடைக்கமாட்டாது. மக்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் மேற்கு நாடுகள் உட்பட அறபு நாடுகளும் பதில் சொல்லியே ஆக வேண்டும். 

மக்களின் இப்போராட்டம் விரைவில் அடக்கப்படும் அல்லது முடிவுக்குக் வந்து விடும் என்று கூற முடியாது. ஹுஸ்னி முபாரகின் சர்வதிகாரத்திற்கு அடங்காதவர்கள் இராணுவத்திற்கு முன் அடங்கிப் போவார்கள் என நம்பமுடியாது. 

எழுச்சியினதும் புரட்சியினதும் தாகத்தில் எகிப்திய மக்கள் மூழ்கி விட்டார்கள். இதன் பிறகு இவர்களை இதிலிருந்து தடுத்து விடுவது அவ்வளவு இலகுவான காரிய மல்ல. என்ன விலைபொடுத்தாவது மீண்டும் நீதியை பெறுவோம் என மக்கள்  முர்ஸியின் ஆட்சியில் நீடித்தது என்ற எச்செய்தியும் இதுவரை வந்ததில்லை என்பதற்கு ஆதரவான இப்போராட்டம் சாட்சி. 

எகிப்திய பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற முர்ஸியின் ஆட்சி அஸ்த மனமாகும் என நினைக்க முடியவில்லை. நாசரின் ஆட்சிக் காலத்திலிருந்து இஹ்வான்கள் அடக்கப்பட்டார்கள் ஒடுக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் எழுச்சி பெற்று வந்தார்கள். இராணுவம் இன்று இந்த ஆட்சியை அடக்கினாலும் எழுந்து வருவார்கள். மீளவும் அரசாள்வார்கள் என்ற அடையாளமே தென்படுகிறது.

- எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

No comments:

Post a Comment