Sunday, September 1, 2013

SDPI கட்சி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்


மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்து பா.ஜ.க பரப்பும் அவதூறு பிரச்சாரத்தை கண்டித்தும், கல்வியில் பின்தங்கியுள்ள தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அதிகரித்து முறையாக வழங்கக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆகஸ்ட் போராட்டம் என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஆகஸ்ட் 31 சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். 

மாநில செயலாளர்கள் S.அமீர் ஹம்சா, T.ரத்தினம் மற்றும் வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன், திராவிட விடுதலை கழகத்தின் பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பத்திரிகையாளர் T.S.S மணி, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது பக்ருதின் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.KS.M.தெஹ்லான் பாகவி தனது உரையில் :


மத்திய மாநில அரசுகள் நாட்டில் வாழும் பிற்படுத்தப்பட்ட எஸ்.சி,எஸ்.டி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கி வருகின்றன. இது நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில் ஆகும். நாட்டில் உள்ள சமூகங்களில் சமுகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டை, சலுகைகளை வழங்க சட்டம் வகை செய்கிற அடிப்படையில் தான் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை மத அடிப்படையல் பிளவுகளையும், துவேசங்களையும் ஏற்படுத்த பா.ஜ.க கட்சி பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

நாட்டு மக்களில் 45% மக்கள் தொகைகளை கொண்ட தலித் எஸ்.டி பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கப்பட்டு வருகின்றன. அதிகமான தொகை எஸ்.சி,எஸ்.டி மானவர்களுக்கே வழங்கப்படுகிறது. ஆனால் சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது போன்று பா.ஜ.க பிரச்சாரம் செய்வது அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் தான். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இதே போன்றே கல்வி உதவி தொகை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் பா.ஜ .க கட்சி இதை அரசியலாக்குவது ஏன் ..?


தமிழகத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பிளவுகளை உருவாக்கி கலவர காடாக்கும் பா.ஜ.க வின் இந்த முயற்சிக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயாக மனித உரிமை சக்திகளும் அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் அதுபோன்றே தமிழக அரசு பா.ஜ.க வின் இந்த முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவாவாறு அவர் தெரிவித்துள்ளார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment