Wednesday, October 3, 2012

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா- கல்மாடி.. அப்போ ஊழல் விவகாரம்?

 Congress Nominates Raja Suresh Kalmadi
டெல்லி: நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.

அதே போல காமன்வெல்த் ஊழலில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடியும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இதன்மூலம் இருவரது ஊழல்களையும் மத்திய அரசு லேசாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசாவும், வெளி விவகாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக கல்மாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காமன்வெல்த் ஊழலைத் தொடர்ந்து கல்மாடியை காங்கிரஸ் கட்சியை விட்டே நீக்கியது நினைவுகூறத்தக்கது.
காங்கிரசுடன் பல்வேறு பிரச்சனைகளால் மத்திய அமைச்சரவையில் சேர மறுத்து வரும் திமுகவை தாஜா செய்யும் வகையிலேயே ராசாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்மூலம் ராசா மீது மத்திய அரசு இனியும் தீவிர நடவடிக்கைகளில் இறங்காது என்பது உறுதியாகிறது.

No comments:

Post a Comment