Wednesday, October 3, 2012

300 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு "மாதாந்திர" நிதி உதவி!


கோழிக்கோட்டில் செயல்படும் "ஹோம் கேர் சென்டர்" மூலம், 300க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர நிதியாக தலா 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று  துவக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 4 வயதுக்கு மேற்பட்ட ஏழை மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.  தங்கள் வீட்டில் இருந்த படியே கல்வி பயிலும் வகையில், கண்ணூர் மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்த 300 மாணவவர்களின் பராமரிப்பு சிலவினங்களுக்காக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அப்துல் ஹகீம் அஸ்ஹரி, நாட்டில் வாழும் ஏழை முஸ்லிம்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், ஏழைகளின் வாழ்வில் ஒலியேற்ற, வசதி படைத்தோர் "கல்வி உதவி"களில் ஈடுபடும் போது, நல்லதோர் மாற்றம் உருவாகும் என்றார்.

மேலும் "ஹோம் கேர் "அமைப்பு கேரளாவை கடந்து அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ 1000 "மணி ஆர்டர்" மூலம் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார். தவிர, மேல் படிப்பு விஷயத்திலும் முடிந்த வரை உதவி வருவதாக "ஹோம் கேர்"  நிர்வாகிகள்  தெரிவித்தனர்.

No comments:

Post a Comment