மிஸ்ர் நாட்டை சேர்ந்த முஹம்மத் பிஷர் என்பவர், தோற்றத்தில் அச்சு அசலாக முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் போன்று இருக்கிறார்.
இவரை தொடர்பு கொண்ட சிலர், சதாம் ஹுசைன் குறித்த திரைப்படம் தயாரிக்கவிருப்பதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டனர். இதற்காக 3,33,000 டாலர்கள் ஊதியம் பேசப்பட்டது. மார்க்க பற்று நிறைந்த "முஹம்மத் பிஷர்" நல்லெண்ண அடிப்படையில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் வேளையில் சதிகாரர்களின் சூழ்ச்சியை புரிந்துக்கொள்ள முடிந்தது.
சதாம் ஹுசைனை கேவலப்படுத்தும் நோக்கில், அவரை சம்மந்தப்படுத்தி ஆபாசக்காட்சிகளை தயாரிக்க முற்பட்டனர். இதை கடுமையாக ஆட்சேபித்த முஹம்மத் பிஷரை, கடந்த வார இறுதியில் "இஸ்கந்திரிய்யா" என்ற இடத்தில் வைத்து, "கருப்பு உடைகளில் வந்த மூன்று நபர்கள்" ஒரு வேனில் கடத்தி சென்று அடித்து உதைத்தனர்.
மேலும் வாங்கிய பணத்துக்கு, நாங்கள் சொல்வது போல் நடித்தே ஆகவேண்டும் என்றும் எச்சரித்தனுப்பினர். இது குறித்து அவரது மகன்கள் கூறும் போது, எங்கள் தகப்பனாரின் உருவம் சதாமை ஒத்து இருப்பதால், நாங்கள் கடந்த காலங்களிலும் பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறோம். அமெரிக்கப்படைகள் சதாமை தேடிவந்தபோது, மிஸ்ர் நாட்டில் வசிக்கும் சில ஈராக்கியர்கள், அமெரிக்காவிடம் பரிசு பெறும் நோக்கில், எங்கள் தந்தையை கடத்த முற்பட்டனர்.
இதனால், நாங்கள் எங்கள் தந்தையின் இருப்பிடத்தை 4 முறை மாற்றவேண்டியதாகி விட்டது. ஒரு வழியாக 2006 டிசம்பரில் சதாம் தூக்கிலடப்பட்ட பிறகு நிம்மதி கிடைத்தது. இப்போது, வேறு வழியில் எங்கள் தந்தைக்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் சதாமை கேவலப்படுத்தும் எந்த காட்சிகளிலும் எங்கள் தந்தை நடிக்க மாட்டார், என உறுதிபடக்கூரினர்,முஹம்மத பிஷரின் மகன்கள்.

No comments:
Post a Comment