Thursday, September 6, 2012

மன்மோகன்சிங் மீதான விமர்சனம்: வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை சாடுகிறது பிரதமர் அலுவலகம்

 Pmo Replies Washington Post Slams Journalist
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாக விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை இடம்பெற்றிருப்பதற்கு பிரதமர் அலுவகம் விளக்கம் அளித்திருக்கிறது. மன்மோகன்சிங்கை விமர்சித்து ஒருதலைபட்சமாக கட்டுரை எழுதியதற்காக பத்திரிகையாளரையும் மிகக் கடுமையாக சாடியிருக்கிறது பிரதமர் அலுவலகம்.
இது தொடர்பாக கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் சைமனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒரு பத்திரிகையாளரிடன் உரிமையை பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் வரம்புமீறிய முறையற்ற உங்களது செயல்பாடுகளைத்தான் இக்கடிதத்தில் குறிப்பிடுகிறோம்.
பிரதமர் அலுவலகத்துடன் என்னுடனும் தினந்தோறும் பேசிவரும் நீங்கள், இந்தக் கட்டுரை தொடர்பாக எங்களது கருத்தை கேட்காமல் பிரசுரித்திருக்கிறீர்கள். இது முழுவதும் ஒரு தலைபட்சமான கட்டுரை.
எங்களிடம் இண்டர்வியூ கேட்டதாகவும் அது மறுக்கப்பட்டதாகவும் ஊடகங்களிடம் கூறியிருக்கிறீர்கள். உங்களுக்குப் பேட்டி மறுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்வரை பேட்டிதர இயலாது என்றுதான் கூறப்பட்டது. இன்னும் 2 நாட்களில் கூட்டத் தொடர் முடிவடைய இருக்கிறது.
இந்தவிவகாரம் தொடர்பாக உங்களிடம் நான் பேசிய போது இரண்டு முறை வருத்தம் தெரிவித்தீர்கள். ஆனால் ஊடகங்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறியுள்ளிர்கள்.
நாங்கள் கொடுத்திருக்கும் பதில் உங்களது இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. 11 மணி நேரம் கழித்து நீங்கள் மூன்றாவது முறையாக இது தொடர்பாகவும் வருத்தம் தெரிவித்தீர்கள்.
இதேபோல் பிரதமரின் ஆலோசகர் சஞ்சய் பரு 8 மாதங்களுக்கு முன்பு இந்திய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறப்பட கருத்தை உங்கள் கட்டுரைக்குப் பயன்படுத்தியுள்ளீர்கள்.
எங்களைப் பொறுத்தவரை வாஷிங்டன் போஸ்ட் ஏட்டில் இருந்து நேர்மையான ஒருசார்பற்ற ஒரு பத்திரிகையாளரைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஊடக சுதந்திரம் என்ற பெயரில் பிரதமரின் செயல்பாடுகளை ஒருதலைபட்சமான கருத்தோடு வெளியிட்டிருக்கிறீர்கள். இப்போது நாங்கள் அளித்திருக்கும் விளக்கத்தை உங்களது ஊடகத்திலும் இணையதளத்திலும் வெளியிட்டு வாசகர்களுக்கு உண்மை என்ன என்பதை அறியத்தருவீர்கள் என நம்புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment