Sunday, September 9, 2012

போலீசால் பழி வாங்கப்படும் முஸ்லிம்கள் : ஆதாரங்களுடன் "டாக்குமென்ட்ரி" படம்!


டெல்லியை சேர்ந்த "பகர்தீப் சக்கரவர்த்தி" என்ற பிரபல "டாக்குமென்ட்ரி" பட இயக்குனர், தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப்பின் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு
விடுதலை பெற்ற 7 முஸ்லிம் இளைஞர்களின் உண்மை வரலாற்றை "டாக்குமென்ட்ரி"  படமாக இயக்கியுள்ளார். இதற்கு, "மா பாத் ஹங்காமா" (பரபரப்புக்குப்பின்) என பெயர் சூட்டியுள்ளார். இதில் வரும் உண்மை கதாபாத்திரங்கள் : 1.முக்தார் அஹ்மத்.  2.முஹம்மத் பசீஹுத்தீன். 3.உமர் பாரூக். 4.முஹ்தஷிம். 5.ஹுரியத் அன்சாரி. 6.முஹம்மத் முசர்ரத் ஹுசைன். 7.ஷேக் அப்துல் கலீம்.  

1.முக்தார் அஹ்மத், தற்போது 49 வயதுடைய இவர், பெங்களூருவில் "ரெடிமேட்" வியாபாரம் செய்து வந்தார். அவரை 1993ம் ஆண்டு செப்டம்பர் 3ந்தேதி, சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பில் சம்மந்தப்படுத்தி கைது செய்தது,பெங்களூரு போலீஸ். 16 ஆண்டுகள் கழித்து 2010ம் ஆண்டு டிசம்பர் 6ந்தெதி, அவர் எந்த குற்றமும் செய்யாத நிரபராதி என, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். (16 ஆண்டுகளை சிறையில் கழித்ததால், அவரது வியாபாரம் சீற்குளைந்ததுமில்லாமல், குடும்ப வாழ்க்கையிலும் பெரும்பின்னடைவு ஏற்பட்டது.)

2.முஹம்மத் பசீஹுத்தீன். ஹைதராபாத்தை சேர்ந்த இந்த இளைஞர், பட்டபடிப்பு படித்து வந்தார். 2007ம் ஆண்டு செப்டம்பர் 5ந்தேதி ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது, இரண்டு குண்டு வெடிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். 6 மாத சிறை வாசத்துக்குப்பின் ஒரு வழியாக 2008ல் விடுதலையானார்.

3.உமர் பாரூக். 28 வயதுடைய இவரை 2006ம் ஆண்டு ஜூன் 9ந்தேதி, அஹ்மதாபாத் போலீஸ் கைது செய்தது. இவர் மீது "ஹிந்துத்துவா" தலைவர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்த இவர்,  4 ஆண்டுகள் கழித்து, 2010ம் ஆண்டு ஜூலை 29ல் விடுதலை செய்யப்பட்டார்.  

4.முஹ்தஷிம்.  இஞ்சினியரிங் மாணவரான இவரை, இவரது வீட்டு திண்ணையில் வைத்து 2008ம் ஆண்டு மார்ச் 5ந்தேதி கைது செய்த போலீஸ் 9 மாதங்கள் கழித்து, அதே ஆண்டின் இறுதி நாளான, டிசம்பர் 31ந்தேதி நிரபராதி என கூறி விடுதலை செய்தது.

5.ஹுரியத் அன்சாரி. (S /O டாக்டர் ஷகீல் அஹ்மத். அவர் பிரபல  பிரபல டாக்டர் என்பதுடன்  "மெடிகல் ட்ரான்ஸ்கிரிப்ஷன்" தொழிலில் ஆழமாக கால் பதித்து செயல்பட்டு வந்த உயர் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்) 2003 டிசம்பர் 11ந்தேதி கைது செய்யப்பட்டார்.  அஹ்மதாபாத்தின் பிரபல கட்டடங்களை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக  இவர் மீது  குற்றம்  சுமத்தப்பட்டது. 6 ஆண்டுகள் கழித்து 2009 டிசம்பர் 12ந்தேதி குற்றமற்றவர், என கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்.

6.முஹம்மத் முசர்ரத் ஹுசைன். தற்போது 35 வயதாகும் இவர்,  சாதரான பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கொல்கத்தாவில் உள்ள "அமெரிக்கன் சென்டரில்" போலேசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொய் புகாரை புனைந்த போலீஸ், 2002 மார்ச் 7ந்தேதி இவரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது.  8 ஆண்டுகள் கழித்து 2010 பிப்ரவரி 7ல் விடுதலை செய்யப்பட்டார்.

7.ஷேக் அப்துல் கலீம். மருத்துவக்கல்லூரி மாணவரான இவர் மீது, இரண்டு வழக்குகள் பதிவு செய்த போலீஸ், இவரை 2007 ஜூன் 7ல் கைது செய்தனர். இவர் மீதான ஒரு வழக்கில், 2008 செப்டம்பர் 20ல் தீர்ப்பு சொல்லப்பட்டது. மற்றொரு வழக்கில் 2009 ஜனவரி 22 ல் நிரபராதி என தீர்ப்பு சொல்லப்பட்டு விடுதலை ஆனார். மேற்கண்ட 7 நபர்களின் உண்மை வரலாற்றை தத்ரூபமாக "டாக்குமென்ட்ரி"   எடுத்துள்ள சக்கரவர்த்தியின் "ஆவணப்படம்" பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.                                                                                                                                                                                                                              

குறிப்பு : இந்த "டாக்குமென்ட்ரி" முஸ்லிம்களுடன் அன்றாடம் நிகழும் அரச பயங்கரவாதத்தின் சிறு துளி மட்டும் தான். இதை விட ஆயிரம் மடங்கு கொடுமைகளுக்கு, முஸ்லிம் சமூகம் ஆளாகி வருகிறது. இந்த 7 நபர்கள் பட்ட சிரமத்தைக்காட்டிலும் பல ஆயிரம் இளைஞர்களின் வேதனை வரலாறுகளை நம்மால் சொல்ல முடியும்.

No comments:

Post a Comment