Sunday, September 23, 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு : விழிப்புணர்வு "பிரச்சார" போராட்டம்!


இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து, உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல போராட்டங்களுக்கு உரிய அனுமதி மறுப்பதுடன், அமெரிக்க தூதரகங்களை நெருங்கவிட மறுக்கிறது, இந்திய அரசு. எனவே "குதாயீ மதத்கார்" என்ற பட்டதாரி வாலிபர்களின் அமைப்பு புதிய யுக்தியை கையாண்டு "டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக நுழைவு வாயில் வரை" நேரடியாக தனது போராட்டத்தை எடுத்து சென்றது.

முஹம்மது நபி அவர்களை குறித்து "பேராசிரியர். எஸ்.ராவ்" என்பவர், ஹிந்தி மொழியில் எழுதியுள்ள "இஸ்லாம் கே பைகம்பர் ஹழ்ரத் முஹம்மத்" என்ற புத்தகத்தை, அமெரிக்க தூதரக நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டு, தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கும் விநியோகித்தனர்.

பெரும் அளவில் கூட்டம் சேர்க்காமல் சிறு சிறு குழுக்களாக பிரிந்து நின்றுக்கொண்டு, புத்தக விநியோகத்தை  நடத்தினர். என்றாலும்,போலீசார் இவர்களுக்கு தொந்தரவு கொடுக்க தவறவில்லை.

இவர்களின் கேமராக்களை பிடுங்கி, அதில் எடுக்கப்பட்ட படங்களை அழிக்கும் செயலை செய்தனர். ஒரு கட்டத்தில், புத்தக விநியோகத்தை தடை செய்ய முற்பட்ட போலீசுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் மத்தியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

எனினும், டெல்லி "கென்னாட் பிளேஸ்" பகுதியில், வேனை நிறுத்தி வைத்துக்கொண்டு "ஹரே ராமா - ஹரே கிருஷ்ணா" அமைப்பினர் புத்தக விநியோகம் செய்வதை எடுத்துக்கூறி, தங்கள் வேலைகளை தொடர்ந்தனர், "குதாயீ மதத்கார்" இளைஞர்கள்.

No comments:

Post a Comment