Wednesday, September 12, 2012

பள்ளி மாணவனை கடத்த முயன்ற "ATS" போலீசுக்கு அடி-உதை!


டெல்லி ஜாமியா நகர் "ஷாஹீன் பாக்" பகுதியில், 16 வயது பள்ளி மாணவனை கடத்த முயன்ற, மும்பை "ATS" படையை சேர்ந்த போலீசாரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
நேற்று (11/09) மாலை 6.30 மணியளவில் ஒரு வீட்டின் எதிரில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த் மற்றும் விக்ரம் தலைமையில் "சாதாரண உடை"யில் இருந்த 7 பேர் கொண்ட ATS போலீசார் மறைந்து நின்றுக்கொண்டு, அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது, டியூஷன் படிக்க செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவன், ஹசன் அஹ்மத் (16) என்ற சிறுவனை வலுக்கட்டயாமாக காரில் கடத்த முயன்றனர்.

பயந்து போன மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். விசாரித்த போது "கடத்தல்காரர்கள்" தங்களை மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவு  போலீஸ் (ATS) என்றனர். செல்போன் திருட்டு வழக்கு சம்மந்தமாக விசாரிக்க வந்துள்ளோம், என முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
செல்போன் திருட்டு வழக்கு விசாரணை என்றால் "உள்ளூர் போலீஸ்" விசாரிக்க வேண்டிய விஷயத்துக்காக நீங்கள் ஏன் வரவேண்டும்? என்று சரமாரி கேள்விகளை, பொது மக்கள் எழுப்பினர். மேலும், அவர்கள் சிறுவன் ஹசன் அஹ்மதை மீட்டதோடு கடத்தல் கும்பலையும் அடித்து உதைத்தனர். அடி-உதை தாங்காமல் 3 நபர்கள் ஓடி விட்டனர். இதற்கிடையில், உள்ளூர் எம்.எல்.ஏ. ஆசிப் முஹம்மத் கான், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

மேலும் இரவு நேரமாகி விட்டபடியால் பதற்றம் மேலும் அதிகமானதை  தொடர்ந்து, டெல்லி போலீசின் "ஜாய்ன்ட் கமிஷனர் அஜய் சௌத்ரி"  தலைமையில் போலீசார் குவிந்தனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ, உள்ளிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைப்பிடிக்கப்பட்ட ATS போலீசாரை மீட்டனர்.  கடத்தப்பட இருந்த  மாணவன் ஹசனுக்கு வயது 16 என்பதும், அவர் நொய்டாவில் உள்ள M.A.F. பள்ளிக்கூடத்தில் 11ம் வகுப்பு படித்து வருவதும், மிகுந்த நன்னடத்தை உள்ளவர் என்பதும் தெரிய வந்தது.

என்றாலும், "இஸ்ரேல் தூதரக கொண்டு வெடிப்பு" வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல "பத்திரிக்கையாளர் காசிமி"யின் சகோதரி மகன், என்ற உறவின் காரணமாக போலீசின் "கழுகுப்பார்வை" இவர் மீது திரும்பியது, விசாரணையில் தெரியவந்தது.

No comments:

Post a Comment