Sunday, September 23, 2012

கேரள போலீசின் இரட்டை நிலை : பொங்கியது முஸ்லிம்களின் கோப அலை!


மீலாது (நபிகள் நாயகம் பிறந்த நாள்) ஊர்வலத்தில் "ராணுவ உடை" அணிந்து சென்ற முஸ்லிம்கள் மீது "தேச துரோக வழக்கு" தொடர்ந்த கேரள போலீஸ்,
தற்போது கிருஸ்தவர்கள் ஊர்வலத்தில், ராணுவ உடை அணிந்து சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. கேரள போலீசின் இந்த பாரபட்சமான செய்தியாவது, இந்த வருட துவக்கத்தில் காசர்கோடு மாவட்டம் கஞ்சன்காடு "ஜும்ஆ மசூதி கமிட்டி"யின் சார்பில் மீலாது ஊர்வலம் நடந்தது.

அதில் கலந்துக்கொண்ட ஜுனைத், அர்ஷத், ஆரிப் ஆகிய மூன்று இளைஞர்கள், ராணுவ உடை அணிந்து மிடுக்கான வகையில் சென்றனர். ராணுவ உடை அணிந்து செல்வது "தேச துரோக குற்றம்" என பா.ஜ.க. இளைஞர் அணித்தலைவர் சுரேந்திரன் கொக்கரித்தார். மீடியாக்களும் இதை ஊதிப்பெரிதாக்கின.

ஊர்வலங்களில் மிடுக்கான பல அணிவகுப்புக்கள் நடப்பது, நாட்டில் நடக்கும் சாதாரண நிகழ்வுகள் தான், என்றாலும் "முஸ்லிம்களுக்கு அந்த உரிமை இல்லை" என்பது போல், சங்பரிவார்களின் ஆதரவு "டி.வி" மீடியாக்களால் பெரும் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டது.

தினசரி பத்திரிக்கைகளும், பல நாட்கள் அதை பரபரப்பு செய்தியாக்கின. இறுதியில், கேரள போலீசாரால், முஸ்லிம் வீடுகளில் "ரெய்ட்" நடத்தப்பட்டு ராணுவ உடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 3 முஸ்லிம் வாலிபர்களின் மீதும் தேச துரோக கொடுன்சட்டம் போடப்பட்டது. இதற்கிடையில், 2 தினங்களுக்கு முன் "Kerala Catholic Bishop Council" (KCBC) என்ற கிருஸ்தவ அமைப்பு, மதுவுக்கு எதிரான ஊர்வலம் நடத்தியது.

இந்த ஊர்வலம், மாநில முதலமைச்சர் வீடு இருக்கும் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும், இந்த ஊர்வலத்தில் சென்ற பலர் "ராணுவ உடை" அணிந்து சென்றதுடன், ராணுவ ஹெலிகாப்டர் போன்ற தோற்றமுடைய ஒரு வாகனத்தையும் ஊர்வலத்தில் கொண்டு சென்றனர்.

இதை பார்த்த முஸ்லிம்கள், கேரள போலீஸ் அதிகாரிகளிடம் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது போல் இந்த ஊர்வலத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  அல்லது, முஸ்லிம்கள் மீதான வழக்கை கைவிடவேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து கிழக்கு கோட்டயம் போலீஸ் உயரதிகாரியான தாம்சனிடம் கேட்ட போது, இந்த ஊர்வலம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது, இதில் வழக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை, என்றார். மீலாது ஊர்வலமும் போலீஸ் அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிலையிலும், முஸ்லிம்கள் "ராணுவ உடை" குறித்து பக்கம் பக்கமாக எழுதிய ஊடகங்கள், தற்போது மவுனம் காத்து வருகின்றன.

ஒரே ஆண்டில் - ஒரே ஆட்சியில் - ஒரே செயலுக்கு, இருவேறு நிலைப்பாட்டை எடுக்கும் போலீசின் "இரட்டை நிலை"  மற்றும் பாரபட்ச போக்கால், கேரள முஸ்லிம்கள் கடும் கோப நிலையில் உள்ளனர்.

No comments:

Post a Comment