Sunday, September 9, 2012

முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் பால் தாக்கரே!


எனக்கு கோபம் வந்து விட்டால், முஸ்லிம்களை மகாராஷ்டிரம் உட்பட இந்தியாவில் எங்கும் விட்டு வைக்க மாட்டேன் என்று, 86 வயது கிழட்டு ரவுடி பால்தாக்கரே, தனது துவேஷ பேச்சுக்களால் முஸ்லிம்களை சூடேற்றிப்பார்க்கிறார்.
நேற்று (08/09) மதியம் வெளவந்த சிவசேனை கட்சியின் "சாம்னா" பத்திரிக்கைக்கு, அவர் அளித்த பேட்டி : முஸ்லிம்கள், முதன்முதலாக 1992ல் "பாபர் மசூதி" இடிப்புக்குப்பின்னர் வீதியில் இறங்கினர்.

உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்பட்ட மசூதிக்காக மும்பை வீதிகளில் இறங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பும் அவர்? அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக "மும்பை ஆசாத் மைதானத்தில்"  நிகழ்த்திய வன்முறை, திட்டமிட்ட செயல் என்றார்.

அதேநேரம், குஜராத்தில் "கோத்ரா" ரயில் எரிப்பை தொடர்ந்து, அஹ்மதாபாத்தில் நடந்த கலவரங்கள் எதார்த்தமானது என்றார்,பால்தாக்கரே. என்னிடம் ராணுவத்தை ஒப்படைத்தால் ஒரே மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒடுக்கி விடுவேன்.  முஸ்லிம் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார், முலாயம் சிங் போன்றோரையும் கடுமையாக சாடியுள்ளார்.

பாகிஸ்தானிலும் உங்களை பற்றிய "பயம்" இருப்பது உண்மையா? என்ற கேள்விக்கு ஆம்! என்று பதிலளித்தார் தாக்கரே. மும்பை போலீஸ், பீகாரியை கைது செய்தபோது நிதீஷ்குமார் குரல் எழுப்பியதை கண்டித்த அவர், முஸ்லிம் வாக்குகளை பெற, கூட்டணியிலிருந்த போதும் "நரேந்திர மோடி" பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சொன்ன அவர், நிதீஷுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால், பீகார் பாஜக, முஸ்லிம்களுக்கெதிராக வீரியத்துடன் செயல்படவில்லை, என்றார்.

No comments:

Post a Comment