Friday, August 10, 2012

புனே குண்டு வெடிப்பு : தயானந்த் பாட்டீலை முஸ்லிமாக சித்தரிக்க முயல்கிறது என்.ஐ.ஏ.


புனே நகரில் 10 நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகத்திற்கிடமாக காயமடைந்த "தயானந்த்  பாட்டில்" குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வுக்குழு (NIA),
குண்டுவெடிப்பின் காரணங்களையும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு, தயானந்த் பாட்டில் முஸ்லிமாக இருப்பாரோ? என்ற ஒரே கோணத்தில் விசாரித்து வருகிறது.

முன்னதாக அவரை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்ற ATS படையும், பாட்டீலை முஸ்லிமாக நிரூபிக்கும் கோணத்திலேயே விசாரணையை நீர்த்து போக செய்துக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் பாட்டீலின் சொந்த ஊரான "பிதர்" பகுதிக்கு சென்று அவரது பள்ளிக்கூட சான்றுகள் உள்ளிட்ட எல்லா வகையான ஆவணங்களையும் சரிபார்த்த ATS படை, பாட்டீலின் தாயுடனும் தனிமையில் விசாரித்து, அவர் முஸ்லிமாக மதம் மாறவில்லை என்பதை தெரிந்துக் கொண்டது.

தயானந்த்  பாட்டீலின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஊர் முழுவதும் விசாரித்த போலீஸ், அவர் முஸ்லிமாக மதம் மாறினாரா? என்ற கோணத்திலேயே விசாரணையின் போக்கை கொண்டு செல்கிறனர்.

வழக்கமாக ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்கும் போலீசால், இம்முறை தயானந்த் பாட்டில் என்ற ஹிந்துவின் மீதான "சந்தேகப்பார்வை" ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விட்டதால், இப்போது தயானந்த் என்ற ஹிந்துவை முஸ்லிமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்த குண்டுவெடிப்பில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு, என்று கதை கட்ட "கதை-திரைக்கதை வசனம்" எழுத தயாராகி வருகின்றனர் முஸ்லிம் விரோத காவல்துறையினர்.

No comments:

Post a Comment