உயர்ஜாதி
இந்துக்குக்களால் 1992ல் அயோத்தியில் "பாபரி பள்ளிவாசல்"
இடிக்கப்பட்டதென்றால், 2012ல் டெல்லியில் உள்ள "அக்பரி
பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசூதி இடிக்கப்பட்டால் சட்டம்
ஒழுங்கு நிலை சீர்கெடும் என்று போலீஸ் எடுத்துக்கூறியும், அதை ஏற்க மறுத்த
நீதிபதிகள் சஞ்சய்கிஷன் மற்றும் ராஜீவ் "எதை பற்றியும் தங்களுக்கு கவலை
இல்லை, எப்பாடு பட்டாகிலும் சட்டம் நிலை நாட்டப்படவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
இது பற்றிய விரிவான செய்தியாவது:
டெல்லியில் "மெட்ரோ ரயில்" பணிகளுக்காக பல இடங்களில் பூமிக்கடியில் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தபோது, டெல்லி செங்கோட்டை (லால் கிலா) அருகில் பூமிக்கடியில் புதையுண்டு - சிதிலமடைந்து இருந்த முழுமையான பள்ளிவாசல் கட்டிட இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், அவை சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் பள்ளிவாசல் தான் என அகழ்வாராய்ச்சி சான்றும் கிடைக்கப்பெற்ற பின், மெட்ரோ பணிகளுக்கு எள்முனையளவும் பாதிப்பில்லாத வகையில் "அக்பரி பள்ளிவாசல்" என்ற அதன் வரலாற்றுப்பெயருடன் மறுநிர்மாணம் செய்யப்பட்டு "5 வேலை தொழுகையுடன் ஜும்ஆ தொழுகை"களும் நடத்தப்பட்டு வந்தன.
இதற்கிடையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு, ஒரு மாத குறுகிய காலத்துக்குள்ளாகவே "அக்பரி மசூதி"யை சட்ட விரோத கட்டடம் என்று தீர்ப்பையும் அறிவிக்கின்றனர்.
இந்திய நாட்டில், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள் என "எங்கும் வியாபித்திருக்கும் ஹிந்து கோவில்கள்" குறித்து, அது சட்டத்துக்குட்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் தானா? என யாரும் ஆட்சேபிப்பதில்லை. ஒரு கோவில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை பார்க்காமல், அது ஒரு வழிபாட்டுத்தலமாகத்தான் பார்க்கப்படுகிறது.
ஆனால் மசூதிகள் விஷயத்தில் மட்டும் "சட்ட விரோத கட்டடம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இடிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகியும் "பாபர் மசூதி" விஷயத்தில் இன்னும் விசாரனையே முழுமையாக நடத்தப்படாத போது (அத்வானி,பால்தாக்கரே உள்ளிட்டவர்கள் மீதான "மசூதி இடிப்பு வழக்கு" இந்தாண்டு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது) அவசர கதியில் அக்பரி பள்ளிவாசலை இடிக்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு "அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்" டெல்லி முஸ்லிம்கள்.

No comments:
Post a Comment