Tuesday, August 7, 2012

மோட்சம் வேண்டுமா மோடியே...?


"குஜராத் இனக்கலவரம்"எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.


இந்த கோர விபத்து நடைபெற்ற மருநாளே மாநிலம் தழுவிய கடை அடைப்பிற்கு ஃபாசிஸ பயங்கரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது. அதே போன்று குஜராத்தி பத்திரிக்கையான சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்கள் தான் இரயிலுக்கு தீ வைத்தனர் என்ற விஷமச் செய்தியை பரப்பினர். மேலும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகளை கட்டவிழ்த்துவிட எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த ஃபாசிஸ் சங்கப்பரிவார கும்பல்கள் அப்பாவி மக்களுக்கு எதிராக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். வயது வித்தியாசமின்றி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். கெளசர்பீ என்ற நிறைமாத கர்பிணியை ஈவு இறக்கமின்றி நடுரோட்டில் கொலை செய்தனர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களில் மிகப்பெரிய கலவரம் என்ற அந்தஸ்தை குஜராத் கலவர் பெற்றது. வழக்கம் போல் இதனை விசாரிக்க மத்திய அரசு ஏற்படுத்திய கமிஷன் அறிக்கையோ கலவரம் நடைபெற்று பல ஆண்டுகள் கழித்து வெளிவந்தது. அதில் இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து உள்ளிலிருந்து தான் ஏற்பட்டது எனவும், வெளியில் இருந்து யாரும் நெருப்பு வைக்கவில்லை என்ற தெளிவான அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அதற்குள்ளாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டனர்.



ஆண்டுகள் செல்லச்செல்ல இக்கலவரத்திற்கு மாநிலத்தை ஆளும் பா.ஜ.க தான் முழு காரணம் என்றும் இக்கலவரத்தின் சூத்திரதாரி அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என வெளி உலகிற்கு தெரியவந்த போதும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டத்திற்கு போதிய தைரியம் இல்லாததையே காட்டியது. முஸ்லிம்கள் இறுதிவரை நம்பி இருந்த நீதித்துறையும் குஜராத் கலவர விவகாரத்தில் முஸ்லிம்களை கைவிட்டது.



தனது கண் முன்னால் தனது குடும்பத்தினர் கொல்லப்படும் போது அக்கொலைகாரனை எவறும் மன்னிக்க தயாராகமாட்டார்கள். குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நரேந்திர மோடியை மன்னிக்க தயாராவார்களா? பிற சமூகம் என்றால் இக்கேள்விக்கு பதில் அளிக்க சற்று யோசிக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் நரேந்திர மோடியை மன்னிக்க தயாராக இருக்கிறது. அதற்கு மோடி செய்ய வேண்டிய காரியம் என்ன...?



இஸ்லாத்தின் வரலாறுகளை புரட்டி பார்த்தோமேயானால் மோடியை விட பல மடங்கு கல் நெஞ்சக்காரர்கள் இருந்திருக்கிறார்கள்.



பத்ரு போர்களத்திலே தனது தந்தை உத்பாவையும் தனது சகோதரர் வலீதையும் கொலை செய்த ஹம்ஜா (ரலி) அவர்களை பலி வாங்குவதற்காக சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் அபு சுஃப்யானின் மனைவி ஹிந்தா அவர்கள். ஹம்ஜாவை படுகொலை செய்வதற்கு ஹிந்தாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வக்ஷி என்ற அபிசினிய நாட்டு அடிமை. ஹம்ஜாவை கொன்றுவிட்டால் இடையளவிற்கு வெள்ளியும் அடிமை பட்டத்திலிருந்து விடுதலை அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தார் ஹிந்தா. அதற்கான அவகாசம் உஹத் போரிலே கிடைத்தது. நயவஞ்சமாக ஹம்ஜா (ரலி) அவர்கள் ஈட்டியால் குத்தி கொலை செய்தார் வக்ஷி. கொல்லப்பட்ட பின்பும் தன்னுடைய கோபத்தை அடக்கமுடியாத ஹிந்தா ஹம்ஜா(ரலி) அவர்கள் வயிற்றை கிழித்து ஈரலை கடித்து துப்பினார் என்றும் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹம்ஜா (ரலி) அவர்கள் உடல் சிதைக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது. இக்கொடூர செயலை செய்த ஹிந்தாவும், வக்ஷியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னால் அவர்களை பலிவாங்காமல் மன்னித்தது இஸ்லாமிய சமூகம். முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொல்ல வந்த ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களை அமீரில் முஃமினீன் (முஸ்லிம்களின் தலைவர்) என்ற அந்தஸ்த்தை வழங்கியது இஸ்லாம்.



நரேந்திர மோடியே உங்களுக்கு மோட்சம் வேண்டுமா...? பாவமன்னிப்பு வேண்டுமா...? முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நீங்கள் நிகழ்த்திய கொடுமைகளை இந்த சமூகம் உங்களை பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டுமா? உங்களுக்கு இருக்கும் ஒரே வழி தூய மார்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். தோற்றத்தில் ஒன்றும் பெரிய வித்யாசம் இருக்கவில்லை. முகத்தில் அழகான வெண்ணிற தாடி அதே அழகை உள்ளத்திலும் ஏற்படுத்திக்கொள்ளங்கள். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவீர்.


ஆக்கம் : முத்து

No comments:

Post a Comment