Friday, August 3, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் மீது 28 கொலை வழக்குகள் உள்ளன -நீதி மன்றத்தில் கேரளா டி.ஜி.பி யின் விஷம் தனம்


கொச்சி: தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான "சிமி"யில் முன்னால் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான் இப்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருக்கிறார்கள் என்பதால் அதனை ஒரு "அடிப்படைவாத அமைப்பு" என்று கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் முன்னால் சிமி அமைப்பில் இருந்தவர்கள் இன்றும் முஸ்லிம் லீக், சி.பி.எம், எல்.டி.எஃப்-ன் அனைத்து இந்திய தேசிய லீக் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளிலும் இருக்கிறார்கள் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



முன்னால் சிமி அமைப்பின் உறுப்பினர்கள் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்களாக இருக்கிறார்கள் என உளவுத்துறையின் கூற்றுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள உயர் நீதிமன்றத்தில் மேற்கொண்டவாறு அறிக்கை சமர்பித்துள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று உளவுத்துறை டி.ஜி.பி சார்பில் கொடுக்கப்பட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு அறிக்கை சமர்பித்தது. 



உளவுத்துறை டிஜிபி கூறும்போது பாப்புலர் ஃப்ரண்ட் சிமி இயக்கத்தின் புதிய உருவம் என்றும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முஸ்லிம் லீக், சி.பி.எம், ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளில் தலைவர்களாக இருக்கும் முன்னால் சிமி உறுப்பினர்களை சுட்டிக்காட்டியுள்ளது. 


முன்னால் சிமி அமைப்பின் உறுப்பினர் வேறு ஏதாவது அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டால் அவ்வமைப்பையும் சிமி அமைப்பு போன்றே கருத வேண்டுமென்றால் கேராளவில் பெரும்பாலான அமைப்புகளை இவ்வாறுதான் கூற இயலும். முஸ்லிம் லீக்கின் எம்.எல்.ஏ அப்துல் சமத் சமதானி, சி.பி.எம் தலைவர் கே.டி.ஜலீல், எல்.டி.எஃப் இந்திய தேசிய லீக்கின் பொதுச்செயலாளர் ஏ.பி. அப்துல் வஹாப் மற்றும் வக்ஃப் வாரிய தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் தலைவருமான ஷேக் மெஹ்மூத் காரகுன்னு ஆகியோர் சிமியின் முன்னால் உறுப்பினர்களாவர். 

மேலும் உளவுத்துற டி.ஜி.பி உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பாக அறிக்கையை சமர்பிக்கும்போது பாப்புலர் ஃப்ரண்ட் மீது 27 கொலை குற்றங்கள் இருப்பதாக தவறான தகவலை கொடுத்துள்ளார். ஜூன் 11 அன்று உள்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் கூறும்போது டி.ஜி.பி கொடுத்த வழக்குகளின் எண்ணிக்கை தவறு என்றும், 9 வழக்குகள் தான் உண்மை என்று தெளிவுபடுத்தியது. 


சட்டசபையில் கேள்வி எழுப்பிய அமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு அரசியல் கட்சிகள் மீது இருக்கும் கொலை குற்றங்களின் எண்ணிக்கையை கோடிட்டு காட்டியது. அதில் எல்.டி.எஃப் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மீது 44 கொலை வழக்கு, சங்கப்பரிவார அமைப்புகள் மீது 34 கொலை வழக்குகள், யூ.டி.எஃப் கூட்டணியின் மீது 4 வழக்கு, முஸ்லிம் லீக் மீது 1 வழக்கு உள்ளதாக குறிப்பிட்டு காட்டப்பட்டது. 

No comments:

Post a Comment