Tuesday, August 7, 2012

இஸ்லாத்தை ஏற்ற 17 "ஒலிம்பிக்" வீரர்கள்!


லண்டனில் நடை பெற்று வரும் "ஒலிம்பிக்" போட்டிகளில் உலகெங்கிலுமிருந்து பங்கெடுக்க  வந்திருக்கும் வீரர்-வீராங்கனைகளின் மத்தியில் "அப்துர்ரஹ்மான் கிரீன்" அவர்களின் தலைமையில் லண்டனில் செயல்படும் "Islamic Education and Research Academy" (IERA) சார்பில் "வாழ்வியல் நெறிமுறைகள்" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அதில், இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளையும், குரானின் அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் உள்ளடக்கிய "விளையாட்டு மட்டும் தான் வாழ்க்கையா?" என்ற தலைப்பிட்ட கையேடுகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் குரானின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் விநியோகிக்கப்பட்டது. ஒலிம்பிக் விருந்தினர் வளாகத்திலேயே, ஆய்வரங்கம் - கருத்தரங்கம் என அறிவு சார்ந்த நிகழ்சிகளும், இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கான கேள்வி-பதில் நிகழ்சிகளும் நடந்தேறியது.

அழைப்பு பணியின் நிறைவு நாளான  04 /08/12 அன்று, 17 வீரர்-வீராங்கனைகள் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றனர்.

1 comment:

Anonymous said...

Masha Allah....

Post a Comment