லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகனும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட்டத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆலம் கான் உள்ளிட்ட அமைச்சர்கள், சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் அச்ரே குஸ்வாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முலாயம் கூறுகையில்,
இந்த அரசில் ஏதோ குறையாக உள்ளது. கடந்த அரசுக்கும், இந்த அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர நான் உங்களுக்கு 6 மாத அவகாசம் கொடுத்துள்ளேன். அதில் 4 மாதங்கள் முடிந்துவி்ட்டன. இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. அதற்குள் எதாவது உறுப்படியாக செய்தால் நல்லது என்றார்.
அவர் விளாசித் தள்ளியபோது அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அந்த கூட்டத்தில் முலாயம் தெரிவித்ததாக ஒருவர் கூறுகையில்,
பல அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவர்கள் தங்கள் செய்லபாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பணியை ஒழுங்காக செய்கின்றனர். அமைச்சர்கள் பொது இடங்களில் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு குறித்து பேசக் கூடாது. அது அவப் பெயரைத் தான் ஏற்படுத்தும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். எனவே நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment