டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதிலளிக்கும் வகையில் 3 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையை எப்படி இழுத்தடிக்க முடியுமோ அப்படி ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் பதிலளிக்க 3 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அன்பழகனின் வழக்கறிஞர் அல்லி அர்ஜூனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இனியும் அவகாசம் கேட்கக் கூடாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பினன்ர் இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment