Wednesday, February 29, 2012

சரத்பவாரை அடித்தவருக்கு கிடைத்தது தர்ம அடி !


சரத்பவாரை தாக்கியவர் கடத்தல்: அடித்து உதைத்து ஆஸ்பத்திரி முன்பு தள்ளி விட்டனர்
மத்திய மந்திரி சரத்பவாரை அடித்தவர், மர்ம மனிதர்களால் கடத்திச்சென்று தாக்கப்பட்டார். மிரட்டல் காரணமாக தலைமறைவாக வாழ்கிறார். முன்னாள் தொலைபேசி துறை மந்திரி சுக்ராம் மற்றும் விவசாயத்துறை மந்திரி சரத்பவார் ஆகியோர் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டனர். இவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கடந்த நவம்பர் மாதம் ஹர்விந்தர்சிங் என்ற இளைஞர்இவர்களை தாக்கினார். சரத்பவாரை கன்னத் தில் அறைந்தார். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தனது 'சமூக சேவை' என்று ஹர்விந்தர் சொன்னார். போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹர்விந்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறையில்தான் கொடுமைப்படுத்தப்படுவதாக, மனித உரிமை அமைப்புகளுக்கு அவர் கடிதம் எழுதினார். டிசம்பர் மத்தியில் ஜாமீனில் இவர் வெளியே வந்தார். டெல்லி ரித்தாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் ஹர்விந்தர் சிங் தங்கி இருந்தார். அவருக்கு மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்தன.



போனில் பேசியவர்கள், உனது 'சமூக சேவை'க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று, மிரட்டினர். இந்நிலையில், அவர் 'மர்ம' நபர்களால் காரில் கடத்தப்பட்டார். கடத்தியவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். முகத்தில் பலமாக குத்துவிட்டனர். இதில் அவரது வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆயுதங்களால் அடித்ததில் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.



ஆசை தீர அடித்து, உதைத்த 'மர்ம' நபர்கள், 'இனி இதுபோல் நடந்து கொண்டால், கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டி, அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றின் முன்பு ஹர்விந்தரை தள்ளிவிட்டனர். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பிய ஹர்விந்தர், 'மர்ம' மனிதர்களின் மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.


No comments:

Post a Comment