சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அமைச்சர்க்ள் 33 பேர் உட்பட 43 பேர் முகாமிட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிகிறது.
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் முத்துசெல்வி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க 33 அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர்கொண்ட தேர்தல் பணிக் குழுவை அதிமுக அறிவித்திருந்தது.
ஆனால் வேட்பு மனு தாக்கலின் போதே அனைத்து நிர்வாகிகளும், அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் திரண்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அதிமுக தேர்தல் பணிகுழு மாற்றியமைக்கப்பட்டதாக அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 9 அமைச்சர்கள் ஒரே கட்டமாக சங்கரன்கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டது மக்களின் முகத்தை மேலும் சுளிக்க வைத்திருக்கிறது.
சங்கரன்கோவில் நகர பகுதியில் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், டாக்டர் விஜய் ஆகியோரும், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஒன்றியங்களில் அமைச்சர்கள் பச்சைமால், பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், செந்தூர்பாண்டியன், கோகுல இந்திரா, வளர்மதி, சுந்தர்ராஜன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டாலினா? அழகிரியா? என அக்கப்போர் நடத்தி வந்த திமுகவினர் சற்றே ஆறுதலான நிலையில் இருக்கின்றனர். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முறையாக பட்டியலிட்டு திமுக வெளியிட்டிருப்பதே இதற்குக் காரணம்.
No comments:
Post a Comment