Friday, March 16, 2012

சங்கரன்கோவிலில் பிரச்சாரம் ஓய்ந்தது-ஞாயிறுக்கிழமை தேர்தல்!


Muthuselvi, Jawahar, SathanThirumalaikumar and Muthukumarசங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் நாளை மறுநாள் (18ம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. 


இந்த தேர்தலில் அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி, தி்முக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார், மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார், பாஜக வேட்பாளர் முருகன் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர். தி்முக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி, திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், மதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். 
இந்ந நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 242 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை கொண்டு செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment