Thursday, March 29, 2012

கோவா : முஸ்லிம் வியாபாரிகளின் முதுகெலும்பை முறிக்கும் பா.ஜ.க. அரசு!


5 மாநில தேர்தல் முடிவுகளில், ஆறுதல் பரிசாக கோவாவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தனது முஸ்லிம் விரோத போக்கை செயல்படுத்த துவங்கி விட்டது.
முழுக்க முழுக்க சுற்றுலா தளமாக செயல்படும், கோவாவில் பல்லாண்டுகளாக காஷ்மீர் முஸ்லிம்கள் கடைகளை நடத்தி வருகின்றனர். காஷ்மீரிகளுக்கு சொந்தமான, நூற்றுக்கணக்கான கடைகளில், மொத்தம் 4000 காஷ்மீர் முஸ்லிம்கள் கோவா சுற்றுலா தளத்தில், தங்கள் மாநில தயாரிப்பு சாதனங்களை சந்தை படுத்தி வருகின்றனர். 
சுற்றுலா பயணிகளும் மிகுந்த சந்தோஷத்தோடு காஷ்மீர் கைவினை பொருட்களை வாங்கி செல்கின்றனர். அங்கு, நேபால், இலங்கை, சீனா உள்ளிட்ட,  பல வெளிநாட்டினரும் தொழில் செய்து வருகின்றனர். பல வெளிநாட்டினரும் சுதந்திரமாக தொழில் செய்து வரும் கோவாவில், சமீபத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. காஷ்மீர் முஸ்லிம்களின் மீது கண் வைத்து, அவர்களை கோவாவை விட்டு, விரட்டும் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. பாசிச சிந்தனை படைத்த பா.ஜ.க, முஸ்லிம்களின் வியாபாரங்களை முடக்கும் முயற்ச்சியில் இறங்கி விட்டது. 
காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம், என்று அடிக்கடி குரல் உயர்த்தும் பா.ஜ.க, அவர்களை இந்திய பிரஜைகளாகவே மதிக்க மறுக்கிறது. பல வெளிநாட்டு வியாபாரிகளும் தாரளமாக நடமாடும் கோவாவில், காஷ்மீர் முஸ்லிம்களுக்கு மட்டும் அடையாள அட்டை (stringer roll) பெறுவதை கட்டாயமாக்கி, அவர்களை அன்னியப்படுத்தியும், அவர்களின் வியாபாரங்களை முடக்கி கோவாவை விட்டு அவர்களை விரட்டும் முயற்ச்சியிலும் ஈடு பட்டுள்ளது. காஷ்மீரிகளை காக்குமா மத்திய அரசு?...  காவிகளுக்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.

No comments:

Post a Comment