Tuesday, March 27, 2012

12 நாடுகள் மீது விரைவில் பொருளாதார தடைகள்: அமெரிக்கா அதிரடி

ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் 12 நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிமிடருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உட்பட 12 நாடுகள் மீது வரும் ஜூன் மாதத்திற்குள் பொருளாதார தடை விதிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக ஹிலாரி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment