Tuesday, March 13, 2012

தரையிறங்கும்போது ரன்வேயில் மோதிய ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி


மும்பை: அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது அதன் வால் பகுதி ரன்வேயில் தரை தட்டியது. சுமார் 10 அடி தூரம் தரையில் உராய்ந்து கொண்டு சென்ற பின் அந்த விமானம் நின்றது. இதையடுத்து விமானத்தின் இரு பைலட்களையும் சஸ்பெண்ட் செய்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் ஒருவர் பெண் பைலட் ஆவார்.



இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 121 பயணிகளில் யாரும் காயமடையவில்லை என்றாலும், மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை மும்பை விமான நிலையத்தின் மெயின் ரன்வேயில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை தவறான முறையில் தரையிறக்கியதே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.



சரியான கோணத்தில் விமானத்தை தரையிறக்காவிட்டால் வால் பகுதி தரையில் தட்டும் என்றும், கிட்டத்தட்ட 250 கி.மீ. வேகத்தில் தரையிறங்கும் விமானத்தின் வால் தரையில் மோதினால், விமானமே இரண்டாக உடையவும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விமானமும் பயணிகளும் தப்பிவிட்டனர்.

No comments:

Post a Comment