Saturday, March 31, 2012

சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து செய்தார் ஜெயலலிதா- உறவுகளை துண்டித்ததால் திருப்தி

சென்னை: உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சசிகலாவின் ஒரு டஜன் உறவினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டநிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு "அக்கா" ஜெயலலிதாவுக்காக "எதையும்" தியாகம் செய்யத் தயார் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏற்கெனவே போயஸ் கார்டனில் சசிகலா குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடமைகள் அனைத்தும் திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment