Saturday, March 17, 2012

பீகார் உள்ளாட்சி தேர்தல் : முஸ்லிம்களுக்கு எதிராக பா.ஜ.க, கூட்டணி அரசு சதி!


பீகார் மாநிலத்தில், வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள், மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேர்தல் நடை பெற உள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புக்களில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை, குறைப்பதற்கான, வேலைகளை அங்கு ஆளும், நிதிஷ்குமார் தலைமையிலான, பா.ஜ.க, கூட்டணி அரசு கச்சிதமாக செய்து முடித்து விட்டது.  அது தான், Bihar Municipal Corporation Act 11/2007. இந்த சட்டத்தின்படி,   14/04/2008 க்கு பிறகு, யாராவது 3வது குழந்தையை பெற்றிருந்தால், அந்த குழந்தையின், தாயோ தந்தையோ, உள்ளாட்சி தேர்தலின் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது. 



அதாவது, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற எவரும், இனி பீகார் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. 14/04/2008க்கு முன் உள்ள கணக்கின்படி, யாருக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும், எந்த தடையும் இல்லை.    (14/04/2008க்கு பிறகும்,  சட்டத்திற்கு புறம்பாக "சின்ன வீடுகள்" மூலம் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும் இந்த சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது.) முஸ்லிம்களை பொறுத்த வரையில் "சின்ன வீடுகள்" வைத்துகொள்ளவும் அனுமதியில்லை, கருக்கலைப்பு, சிசுக்கொலை யும் செய்யக்கூடாது, என்ற நிலையில், 2 குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால், இனி பஞ்சாயத்து தேர்தல்களில் பங்கெடுக்க முடியாது. 


கடந்த 65 ஆண்டுகாலமாக, பாகிஸ்தான் பிரிவினை என்ற சொல்லை பயன்படுத்தி, முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி, அவர்களை தாழ்வு மனப்பான்மையோடு, கூனி குறுகி வாழ வேண்டிய நிர்பந்தங்களை ஏற்படுத்தி, அவ்வப்போது கலவரங்களை ஏற்படுத்தி, உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களை இந்த நாட்டின் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தனர், ஆதிக்க சக்திகள்.  தற்போது, அரசியல் ரீதியான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்களும் சம உரிமையோடு, அதிகாரத்தில் பங்கெடுக்க ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றி, தேர்தல் களம் காண நினைத்தால்,  2 குழந்தைக்கு மேல் பெற்றால், நீங்கள் சம உரிமை - சம அதிகாரம் பெற தேர்தலில் நிற்க முடியாது, என்கின்றனர்.  (உண்மையில் குடும்பக் கட்டுப்பாடு என்பது, தேவையற்ற ஒன்று என்பதோடல்லாமல், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மனித வளம் தான் மிகப்பெரிய பலம் என்பதை, தற்போது பல ஆய்வுகள் மூலம், கண்டுபிடித்துள்ளனர்,  இனிமேல் குடும்பக்கட்டுப்பாடு விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டியதுமில்லை, என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.)

No comments:

Post a Comment