சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னனு இயந்திரங்களில் சின்னங்கள் மற்றும் பெயர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகளில் பயன்படுத்த லேப்டாப்களும் தயார் நிலையில் உள்ளன.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இம்மாதம் 18ல் நடக்கிறது. மொத்தம் 242 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 13 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழ் அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளை அடிப்படையாக வைத்து வாக்கு சீட்டில் இடங்கள், போட்டியிடும் சின்னங்கள், மாநில தேர்தல் ஆணைய ஓப்புதலுடன் சென்னை அரசு அச்சகத்தில் அச்சிட்டு சங்கரன்கோவில் தாலுகா அலுவகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 6 ஆயிரம் வாக்கு சீட்டுகள் கொண்டுவரப்பட்டன. இதில் 13 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளதால் ஒரு வாக்கு சாவடிக்கு ஒரு மின்னனு இயந்திரமே தேவைப்படுகிறது. எனவே 242 வாக்கு சாவடிகளுக்கு உரிய மின்னனு இயந்திரங்களில் வாக்கு சீட்டுகள் பொருத்தப்பட்டன. கூடுதலாக ஒரு வாக்கு சீடடு கையிருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment