பீகார் மாநிலத்தில் சந்தையில் வர்த்தகர்களை தாக்கியதற்காகவும், அங்குள்ள கடைகளை அடித்து நொறுக்கியதற்காகவும் 60 அடையாளம் தெரியாத போலீசார் மீது அம்மாநில போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. சந்தையில், நேற்று மாலை வெளியூரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபில் ஒருவருடன் ஏற்பட கைகலப்பில் உள்ளூர் போலீசாரின் குழு ஒன்று சந்தைக்குள் புகுந்தது.
பின்னர், அவர்கள் அங்கிருந்த கடைகளை உடைத்தனர். மேலும், அங்குள்ள சில வர்த்தகர்களையும் தாக்கியதாக போலீஸ் கண்காணிப்பாளர் மனு மகாராஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர், அவர்கள் அங்கிருந்த கடைகளை உடைத்தனர். மேலும், அங்குள்ள சில வர்த்தகர்களையும் தாக்கியதாக போலீஸ் கண்காணிப்பாளர் மனு மகாராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில், குற்றம் செய்த போலீசார் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கண்காணிப்பாளர் தெரிவித்ததையடுத்து இந்த மறியல் முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment