அமெரிக்காவுக்கு போட்டியாக முன்பு ரஷ்யா திகழ்ந்து வந்தது. ரஷ்யா சிதறியதற்கு பிறகு அதன் வலிமை குறைந்துவிட்டது. இப்போது அந்த இடத்தை சீனா பெற்று வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பனிப்போர்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா செனட் சபையில் பசிபிக் பிராந்திய அமெரிக்க ராணுவ தளபதி ராபர்ட் வில்லார்டுஇதுதொடர்பாக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
சீனா தனது ராணுவ வலிமையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா தற்போது உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தி வருவதால் ராணுவ வலிமையையும் அதற்கேற்றாற் போல் உறுதிப்படுத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
சீனாவை பொறுத்தவரையில் எல்லா வகையிலும் அது அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், மண்டல பாதுகாப்பிற்காகவும் சீனாவுடன் உள்ள உறவை மேம்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.
சீனா கடல், இணையதளம், விண்வெளி என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பசிபிக் மண்டலத்தில் நாம் படை குவிப்பதாக அறிவித்துள்ள போதிலும் சீனாவின் ராணுவ வளர்ச்சியை அது எந்தவகையிலும் பாதிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment