Tuesday, March 6, 2012

ஈரானுக்கு வக்காலத்து வாங்குகிறதா சீனா?


அணுச்சக்திவளப் பாவனையைக் காரணம் காட்டி ஈரான் மீது தடைகளை விதிப்பதை அனேகமான உலக நாடுகள் எதிர்க்கின்றன" என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி குறிப்பிட்டுள்ளார்.


இன்று (06.03.2012) சீன நாடாளுமன்ற அமர்வின்பின் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், "ஈரான்மீதான தடைகள் ஒருதலைப்பட்சமானவை. உலகின் பெரும்பான்மையான நாடுகளைப் போல நாமும் அதனை ஏற்றுக்கொள்வதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.


"உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அணுச்சக்தி வளத்தை சுமுகமான முறையில் தமது உள்நாட்டு சக்திவளத் தேவைகளுக்காகப் பொறுப்புணர்வோடு பயன்படுத்தும் முழு உரிமை உண்டு என்பதே நமது நிலைப்பாடாகும்" என்று திரு யாங் ஜியேச்சி கருத்துரைத்துள்ளார்.

'ஈரான் தன்னுடைய அணுச்சக்தி வளத்தை அணு ஆயுத உற்பத்திக்கும் பயன்படுத்தி வருகிறது' என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானுக்கு எதிரான தடைகளை அமுல்நடாத்துமாறு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் ஒருசில நட்புநாடுகள் தொடர்ந்தும் ஐ.நா.மீது அழுத்தம் பியோகித்து வரும் நிலையில், சீனாவின் இந்த வெளிப்படையான அதிரடி அறிக்கை உலக அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment