லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகள்ல 224 இடங்களில் அக்கட்சி கைப்பற்றியது. இதையடுத்து கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. சட்டசபை தேர்தலில் அக்கட்சி அமோக வெற்றி பெற முலாயமின் மகன் அகிலேஷ் சிங் யாதவ் தான் காரணம் என்றும், அதனால் அவர் தான் முதல்வராக வேண்டும் என்றும் மக்களும், கட்சியினர் பலரும் விரும்பினர்.
38 வயதே ஆகும் அகிலேஷால் மாநிலத்தி்ல உள்ள பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். இந்நிலையில் அகிலேஷ் முதல்வராகாவிட்டால் வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று கூறப்பட்டது. இதற்கிடையே நடந்த கட்சி கூட்டத்தில் அகிலேஷ் முதல்வராகத் தேர்வானார்.
இதையடுத்து அவர்உத்தர பிரதேச முத்லவராக இன்று பதவியேற்றுக் கொண்டார். லக்னோவில் உள்ள லா மார்டினிரி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷி அகிலேஷ் யாதவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவையொட்டி லக்னோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உத்தர பிரதேசத்தின் இளம் முதல்வர் அகிலேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை குறித்து புதிய முதல்வர் கூறியதாவது,
எனது அமைச்சரவையி்ல் அனுபவஸ்தர்களுக்கும், புதியவர்களும் வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல மாநிலத்தில் உள்ள அனைத்து மதத்தினருக்கும், பிரிவினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment