டெல்லி: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை வாங்கியதில் ரூ8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கில் 6 விமானத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.
43 விமானங்கள்
இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்கள் வாங்கியதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. முதல் நிலை விசாரணை அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்த ஊழலில், கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் உள்பட 6 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு அனுமதி கேட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அது பற்றிய கோப்புடன் சி.பி.ஐ. கடிதம் எழுதியது.
ஆனால் அந்தக் கோப்பை சி.பி.ஐ.க்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. அதில் சி.பி.ஐ. கூறியுள்ள அளவுக்கு, அந்த அதிகாரிகளுக்கு பொறுப்பு கிடையாது எனவும் வழக்கு பதிவு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. மீண்டும் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
No comments:
Post a Comment