சென்னை:கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பொய்வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தது. எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் அமீர் சுல்தான். பல சமூக நலப்பணிகளின் மூலம் இவர் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் ஆதரவை நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
சட்டமன்ற உறுப்பினராகவோ, கவுன்சிலராகவோ இருந்து செய்ய வேண்டிய பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வந்ததால் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அமீர் சுல்தான் மேல் பொறாமையும், காழ்புணர்ச்சியும் ஏற்பட்டது. அதே சமயம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தான் செய்த சேவையின் மூலமாக 1250 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்தார்.இந்நிலையில் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நள்ளிரவு வீடு புகுந்து அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறயினர். நான்கு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த அமீர் சுல்தானை விடுவிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அக்கட்சியின் மேலிடம் மேற்கொண்டு வந்தது. கடந்த மாதம் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வாயிதா பெற்று வந்தார்.
மூன்றாவது முறையாக நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கை எந்தவித காரணமும் இல்லாமல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இவ்வழக்கில் அமீர் சுல்தான் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அபுதாஹிரின் கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரால் பதிலளிக்க முடியாமல் போகவே நீதிபதி இவ்வழக்கை பொய் வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் மூலம் ஓரிரு நாட்களில் அமீர் சுல்தான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment