Tuesday, March 27, 2012

ஐ.நாவின் திட்டத்தை ஏற்றுக் கொண்டது சிரியா



சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரச் செய்யும் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகவலை ஐ.நா மற்றும் அரபு லீக்கின் தூதராக செயல்படும் கோபி அன்னானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆறு அம்ச திட்டத்தில் ஐ.நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எதிர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை அடங்கும்.
மேலும் இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அளவுக்கு முறையாக அமுல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் கோபி அன்னானின் பேச்சாளர் கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment