Saturday, February 18, 2012

பிரான்ஸ்- பிரிட்டனின் புதிய அணுசக்தி ஒப்பந்தம்


பிரிட்டனில் தொடங்கப்படவுள்ள புதிய அணுசக்தி நிறுவனத்தினால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என பிரிட்டன் பிரதமர் கமரூன் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியை, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்து புதிய அணுசக்தி தொடங்குவது தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் 1500க்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்புக்களை பெறுவார்கள் என்று கமரூன் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மாபெரும் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகள் இணைந்து தன் திறமையையும், தொழில்நுட்பத்தையும் ஒரு சேரப் பயன்படுத்துவதால் தொழிற்பங்கு, அணுசக்தி பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை பெருகும் என்று கமரூன் தெரிவித்தார்.
EPR Reactor மேம்பாட்டில் முன்னோடியாகத் திகழ்வது அரெவா என்ற பிரெஞ்சு அணுசக்தி நிலையம் ஆகும். இப்போது பிரிட்டனின் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது பங்காக 400 மில்லியன் பவுண்டை கொடுத்து தனது நாட்டின் முதல் EPR Reactor அணுசத்தி நிலையத்தை உருவாக்க இவ்வரசுடன் ஒத்துழைத்து வருகின்றது.
இந்த அணு மின் நிலையம் இங்கிலாந்தின் தென்பகுதியில் ஹிங்க்லி பாயிண்ட்டில் தொடங்கப்படவுள்ளது. பிரிட்டனில் இன்னும் பல இடங்களிலும் இத்தகைய அணு மின் நிலையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஹிங்க்கில் பாயிண்ட்டில் தொடங்கப்படும் அணுசக்தி நிலையத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்கென்று கேர்பாம் நுட்டால் நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிரான்சின் ஈடி எஃப் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது.
இதில் ஈடி எஃப் தனது பங்காக 15 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்து அருகிலேயே ஒரு பயிற்சி மையத்தையும் தொடங்குகிறது. இதுகுறித்து கமரூன், இந்த இனிய ஆரம்பத்தால் விரைவில் சுமார் 30,000 பேர் வேலைவாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் 75% மின்தேவையை அணுசக்தி நிலையங்களே நிறைவு செய்கின்றன. கடந்தாண்டில் ஜரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரிட்டனும், பிரான்சும் அணுசக்தியை ஆதரித்தன.
ஆனால் ஜேர்மனி இவ்விரு நாடுகளுடன் முரண்பட்டு நிற்கின்றது. ஜப்பானில் ஃபுகுஷிமா நகரத்தில் ஏற்பட்ட அணுசக்தி பேரழிவுக்குப் பின்பு ஜேர்மனி தனது அணுசக்தி நிலையங்களை மூடிவிட தீர்மானித்துள்ளது. பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தலில் சர்கோசியை எதிர்த்து போட்டியிடும் ஹோலாண்ட, அணுசக்தியை எதிர்த்துப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் சர்கோசி அதனை ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment