Sunday, February 26, 2012

போலியோ பாதித்த நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்!


டெல்லி: இந்தியா போலியோ இல்லாத தேசம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. போலியோ பாதித்த நாடுகள் பட்டியலிலிருந்தும் இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மன்மோகன் சிங்குடன் போலியோ குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இதுகுறித்து கூறுகையில், "ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவன அமைப்பில் போலியோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 நாடுகள் இடம்பெற்றிருந்தன.



இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் எந்த போலியோ பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சாதனை மூலம் இந்த பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது," என கூறினார்.



பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "நம் நாட்டில் 23 லட்சம் ஊழியர்கள் போலியோ ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது அவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதே நிலை இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடித்தால் போலியோ இல்லாத நாடு என்ற அந்தஸ்து அதிகாரப்பூர்வமாகக் கிடைத்து விடும். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலிருந்தே போலியோவை ஒழித்து விடலாம்," என்றார்.

No comments:

Post a Comment