Friday, February 10, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக செய்துவரும் சமூக மேம்பாட்டிற்கான பணிகளை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்கும் வகையில், சென்ற ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக செய்த நலதிட்ட உதவிகளை பட்டியலிடுகிறோம்.





ஜனவரி - 2012 (சமூக மேம்பாட்டு பணிகள் / உதவிகள்)

1. மதுரை: பெரியார் நகர் பள்ளி வாசலுக்கு ரூ. 19,200/- மதிப்பில் ஆழ்குழாய் கிணறு (BORE WELL) போட்டு கொடுக்கப்பட்டது. மேலும் ரூபாய் 4622/- க்கு கல்வி உதவியும், அனாதையான ஜனாஸா ஒன்றும் அடக்கம் செய்யப்பட்டது.


2. கோவை: வடக்கு மேட்டுப்பாளையம் புளியம்பட்டி பள்ளிவாசலுக்கு கட்டுமானப் பணிக்காக ரூபாய் 22,000 க்கு மணல் வாங்கி கொடுக்கப்பட்டது.



3. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கும், தஞ்சை தெற்கு நெல்லடிக்கொல்லை பள்ளிவாசலுக்கும் சந்தூக் வாங்கி கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 29,768/-.



4. திருப்பூர்: வடுகன்காளிப்பாளையத்தில் 250 அடி நீளத்திற்கு சாலை அமைத்து தரப்பட்டதுடன் சாலையின் இரண்டு பக்கமும் கழிவு நீர் செல்வதற்காக வாய்கால் போன்று கட்டி தரப்பட்டது.



5. நெல்லை: பெண்களுக்காக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 270 பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் விபத்து மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 23,500 வழங்கப்பட்டது. வியாபாரம் செய்ய உதவியாக ரூபாய் 8400/- மற்றும் ஜனாஸா அடக்கம் செய்ய ரூபாய் 3500/-ம் வழங்கப்பட்டது.



6. கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மருத்துவ உதவியாக ரூபாய் 32,450 /- ம், திட்டுவிளையில் இறந்து போன ஒருவரின் குடும்ப செலவிற்காக ரூபாய் 5000/-ம், ஏழைப்பெண் ஒருவரின் திருமணத்திற்காக‌ 21,200/- ரூபாயுடன் 1 1/2 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.



7. நாகப்பட்டினம்: கல்வி உதவித்தொகையாக ரூபாய் 3000/-ம், ஏழை குடும்பத்திற்காக ரூபாய் 2000/-ம் வழங்கப்பட்டது.



8. தஞ்சை தெற்கு: தீ விபத்தில் பாதிக்கபட்ட 2 வீடுகளுக்கு ரூபாய் 15,000/- நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.



9. திருச்சி: NWF சார்பாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 3000/- ம், பட்டுப்புடவையும், ரூபாய் 1500/- மதிப்பில் பாத்திரங்களும் வழங்கப்பட்டது.



10. தஞ்சை: திருமணத்திற்கு உதவியாக ரூபாய் 4750/-ம், கல்விக்காக ரூபாய் 2500/-ம் வழங்கப்பட்டது.



11. சென்னை: 6 மாதக்குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 24,500/-ம், வலிப்பு நோயால் அவதிப்பட்டு வரும் ஒரு சிறுவனின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 50/- ம், +2 வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 4500/- வழங்கியதுடன் வெள்ள நிவாரண உதவியாக 3 நபர்களுக்கு தலா ரூபாய் 2000/- வீதம் மொத்தம் ரூபாய் 6000/- வழங்கப்பட்டது.



சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு நமது துறையின் சார்பில் மீன்பாடி வண்டி ஒன்று வழங்கியிருந்தோம். தினமும் 150 முதல் 170 வரை மட்டுமே சம்பாதித்து வந்த அவர் தற்போது நமது உதவிக்குப்பின் 350 முதல் 500 வரை சம்பாதிப்பதாக கூறுகிறார். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!



கோவை சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு ரூபாய் 2000/- செலவில் மொஹரம் மாதத்தில் விருந்து கொடுக்கப்பட்டது.



1. திருமண உதவியாக 5 பெண்களுக்கு ரூபாய் 86,000 ரொக்கமும், 16 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.



2. ஊனமுற்ற ஒரு நபருக்கு ரூபாய் 1500/- க்கு காலணி வாங்கி கொடுக்கப்பட்டது.



3. கம்யூட்டர்  வாங்குவதற்காக ரூபாய் 4,000/-மும்,  மருத்துவ உதவியாக சுமார் 1,23,000/- ரூபாயும் வழங்கப்பட்டது.



4. கரும்புக்கடையில் வியாபாரம் செய்வதற்காக ரூபாய் 3000/- மற்றும் இரண்டு ஜனாஸாக்கள் அடக்கமும் செய்யப்பட்டதுடன், கோவை ஜி.எம் நகர் மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டது. துப்புறவு தொழிலாளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.





12.  வேலூர்:  சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை யாக ரூபாய் 30,000/- வழங்கப்பட்டது.



கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 யூனிட்கள் இரத்த தானம் செய்யப்பட்டது.



13. ராமநாதபுரம்: 3 ஏழைகளுக்கு திருமண உதவியாக 1.5 லட்சம், மருத்துவ உதவியாக ரூபாய் 3000/-, கொதகுடியில் வீடு புரணமைப்பதற்காக ரூபாய் 14000/- வழங்கப்பட்டது.



கடந்த மாதம் மட்டும் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக ரூபாய் 6,84,643/- பல்வேறு பணிகளுக்கு செய்துள்ளோம். 

1 comment:

arivu said...

masaha allah,
we expect lot

Post a Comment